டார்க் சாக்லேட்

43 4 5
                                    

 உச்சகட்ட கோவம் இயலாமை, இதற்கு மேல் முடியாது என்று முடிவு செய்தவள், வேலை இடத்திலேயே ஒரு மூலையில் படுத்து விட்டாள். எவ்வளவு நேரம் உறங்கினாள் என்று தெரியவில்லை, அவளது அலை பேசி அழைத்தது, " நீங்க அன்னைக்கு ஒரு ஆராய்ச்சியாளரை பத்தி விசாரிச்சிங்கள அவரோட உதவியாளரை நான் இன்னைக்கு சந்திச்சேன். அவர் நம்பர் உங்களுக்கு அனுப்பிற்கென், போய் சந்திச்சு பேசுங்க." என்று கேட்டதும், மேலும்பேசாமல் , நன்றி உரைத்து விட்டு அழைப்பை துண்டித்தாள். வந்திருந்த நம்பருக்கு அழைத்தாள். அவரை சந்திக்க நேரம் வாங்கி கொண்டாள். 

முத்துக்கு அழைத்தாள், அவனிடம் விஷயத்தை கூறி வர சொன்னாள். போகும் வழியில் அவன் சேகரித்த விஷயங்களை பகிர்ந்து கொண்டான்."நீ நெனைக்கிற மாதிரி இது இயற்கையா ஒரு கிராமத்தில் இருந்து இன்னொரு கிராமம் போகல, யாரோ வேணும் னு ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொருத்தரா தேர்வு பண்ணி, அவருக்கு இந்த நோய செலுத்தி தான் இத பண்ணிருக்காங்க. மொதல்ல யாருக்கு பாதிப்பு ஆச்சு னு கண்டு பிடிக்க முடிஞ்சுதுன்னா கண்டிப்பா நாம்ம அத யாரு பரப்புறாங்க னு கண்டுபிடிச்சுற முடியும்." இதை கேட்டவள் பயந்தாள். "இப்படி ஒரு கொடுமையான விஷயத்தை யாரால இன்னொருத்தருக்கு பண்ண முடியும். என்னங்க உலகம் இது" என்றவள் கைகளை இதமாய் பற்றிக்கொண்டான். 

அவர்களை காண அந்த நபரும் காத்திருந்தார். அவரிடம் பேசி முடித்ததும் ஒரு பெரிய மலை அளவு பாரத்தை நெஞ்சில் சுமக்க போவதை அறியாமல் இருவரும் உள்ளே சென்றனர். 

அவர் தன்னை "பிரஜாபதி" என்று அறிமுகப்படுத்தி கொண்டார். அவர் அந்த ஆராய்ச்சியாளரை பற்றி சொல்ல தொடங்கினார். 

"சிவராமன் அவரது உற்ற தோழன் சுஷாந்த். இருவரும் சிறந்த ஆராய்ச்சியாளர்கள். அவர்கள் துறையில் அவர்களது சாதனைகள் அதிகம். ஒரு முறை சிவராம்க்கு வெளிநாட்டுக்கு சென்று நம் உடம்பில் இருந்த வெள்ளையணுக்களை பற்றிய ஆராய்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அங்கு தான் அல்போன்ஸ் என்ற ஆராய்ச்சியாளரை சந்தித்தார் சிவராமன். இருவரும் சேர்ந்து சில ஆராய்ச்சியை செய்தாலும், வெள்ளை அணுக்களின் அளவு குறையும் போது அதை தானே பெருக்கி கொள்ள உதவும் விதமாக ஒரு ஆராய்ச்சியை மேற் கொண்டார் அல்போன்ஸ் . இதில் அவர் வெற்றி கொண்டார். ஆனால் பின்விளைவுகளை அறியவில்லை அவர். ஒருநாள் அந்த ஆராய்ச்சியை ஒரு முயல் மீது பரிசோதித்து பார்த்தார். முதலில் நன்றாக இருந்த முயலை கண்டு மிகவும் பெருமை கொண்டார். அனால் முயல் 3 நாளில் இறந்தது. அதை சுத்தம் செய்து வெளியே எடுத்து சென்ற அவரது உதவியாளர்கள் இருவர் காய்ச்சலுக்கு உண்டாகினர். ஒரு வாரத்தில் அவர்கள் நிலைமை மோசமாக, அல்போன்ஸ் சிவராமின் உதவியை நாடினார். சிவராமன் அவர் அந்த வெள்ளையனு  சோதனைக்கு பயன்படுத்திய வேதியல் முறைகளை ஆராய்ந்து அதை கொண்டே அதற்கு தீர்வு கண்டார். மேலும் இந்த ஆராய்ச்சியை தான் இந்தியாவில் தொடர அனுமதி வாங்கி வந்தார். 

நடனமாடும் புதிர்Where stories live. Discover now