நம்ம பொறுப்பு

40 4 4
                                    

இரவெல்லாம் மயூரியை பற்றி யோசித்தே நேரத்தை ஓட்டி விட்டு மறுநாள் காலையில் இழுத்து போர்த்தி உறங்கி கொண்டிருந்தவனை, தயாளுஅம்மாளின் இறுதி மிரட்டல் எழ வைத்தது. எழுந்தவன் என்றையும் விட இன்று தாமதமாக கிளம்ப மிகவும் கடுப்பானார் தயாளுஅம்மாள். நம் திகழனோ எதை பற்றியும் கவலை கொள்ளாமல் மயூரியுடன் நடனமாடி  கொண்டிருந்தான் பகல் கனவில்.மண்டையில் நச் என்று விழுந்த கொட்டில் "ஸ் அம்மா " என்று நிமிர்ந்து பார்த்தால், அங்கு தயாளுஅம்மாள் காளி போல நின்றிருந்தார்."என்ன அம்மா, எதுக்கு இப்போ இந்த முறைப்பு.?" என்றான். "கீழ பாரு" என்றார் தயாளுஅம்மாள். "கீழ என்ன?" என்றவாறு குனிந்தவன் காலுறை அணிந்து அதற்கு வீட்டுக்கு போடும் செருப்பை சிரத்தையாக போட்டு கொண்டிருந்தான். அசடு வழிய நிமிர்ந்து அன்னையை கண்டான். அவனது அந்த முகத்தை கண்டதும் வெடித்து சிரித்தார்."தயவு செஞ்சு கெளம்பு டா, நான் இட்லி தோசை மாவுக்கு அரிசி ஊற போட்ருக்கேன்.நீ கெளம்புனாத்தான் நிம்மதியா நான் வேலைய செய்யறதுக்கு." என்றார். "கிளம்பிட்டேன்" என்றவன், பெரிய காலனியை அணிந்து கொண்டு பறந்து விட்டான். 

மகனை நினைத்து சிரித்து கொண்டே , அரிசியை கழுவி கொண்டிருந்தார். அப்போது வாசலில் "அம்மா" என்ற குரல் கேட்டது .வெளிய வந்து பார்த்தால், அங்கு 25 வயது மிக்க இளைஞன் கையில் பையுடன் நின்றிந்தான். "சொல்லு பா" என்ற தயாளுஅம்மாளிடம், "நான் இந்த ஏரியா கேபிள் டிவி கான்ட்ராக்டர் அம்மா. உங்களுக்கு கேபிள் தொடர்பு வேணுமா அம்மா." என்றான்.அவனை எடை போடும் விதமாக பார்த்தவர், "எங்களுக்கு கேபிள் தொடர்பு வேண்டாம் பா.நீ போகலாம்."என்று உள் செல்ல ஆயத்தமானவரை " ஒரு கிளாஸ் தண்ணி அம்மா, ரொம்ப தாகமா இருக்கு" என்று கூறி நிறுத்தினான். தயாளுஅம்மாள், ஏதும் பேசாமல், உள்ளே சென்று தண்ணி கொண்டு வந்தார்.வாங்கி அருந்தி விட்டு நன்றி சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான். 

கொஞ்ச தூரம் நடந்து விட்டு, தெரு முனைக்கு சென்று தனது சிகப்பு தொப்பியை அணிந்து கொண்டு அவன் அலைபேசியை தட்டினான்."பார்சல் வரவேற்பரை ல தான் இருக்கு. உள்ள ஒரு 10 நிமிஷம் இருக்க வாய்ப்பு கெடச்சா போதும். என்ன இருக்கு னு பாத்துட்டு வெளிய வந்துரலாம்." என்றான். தொடர்பில் இருந்த மனிதன் எதோ கேட்க "நானே போய் கேபிள் ஆபரேட்டர் போல பேசினேன், அவங்க நம்பிட்டாங்க. ஏதும் சந்தேக படல, ஒன்னும் டென்ஷன் ஆகுறதுக்கு இல்ல." என்றதும் தொடர்பு துண்டிக்க பட்டது. இரண்டு நொடிகளில் அங்கு வேகமாய் வந்து கொண்டிருந்த லாரி சிகப்பு தொப்பிக்காரனை அடித்து தூக்கியது. தனது இறுதி மூச்சை விட்டான் சிகப்பு தொப்பிக்காரன். அன்று இரவே அவன் இருந்த வீடு காலி செய்யப்பட்டு. அடுத்த 2 நாட்களில் புது ஆட்கள் குடி வந்தனர்.

நடனமாடும் புதிர்Where stories live. Discover now