துண்டு சீட்டுகள்

38 4 4
                                    

********************************************************************************

அலுவலகத்திற்கு வந்து விட்ட திகழனுக்கு நினைவெல்லாம் புன்னகையுடன் தன்னிடம் விடை பெற்று சென்ற மயூரியே இருந்தாள். மாலை இன்னும் கொஞ்ச நேரத்தில் வேலை முடித்து கிளம்பிவிடலாம் என்று எண்ணி கொண்டிருந்த திகழன் அலைபேசி அலறியது. அம்மா தான் என்று பார்த்ததும் அழைப்பை ஏற்றான். "திகழா நான் சொல்லறத கவனமா கேளு, கேள்வி கேக்காத. ரெண்டு புது பூட்டு வாங்கு உன் ஆபீஸ் கிட்டயோ இல்ல நம்ம வீட்டுக்கு கிட்டயோ வேண்டாம் தூரமா போய் வாங்கு. வீட்டுக்கு எப்பயும் போல வா, பூட்டுன வீட்டை கீழ பாத்துட்டு மேல போய் மயூரி வீட்டு பூட்ட மாத்திட்டு, எனக்கு  மேல இருந்தே எங்க இருக்கீங்க னு கால் பண்ணு. இன்னும் 40 நிமிஷத்துல நீ வீட்டுல இருக்கனும். கேள்வி கேக்காத. செய் " என்று விட்டு அழைப்பை துண்டித்தார் தயாளுஅம்மாள். 

இங்கு மயூரி கேவலோடு அழுது கொண்டிருந்தாள். "தைரியமா இரு டா, இன்னும் ஒரு அரைமணிநேரம் வண்டி வந்திரும் நம்ம கிளம்பலாம்." என்று தேற்றி கொண்டிருந்தார் தயாளுஅம்மாள். அங்கு திகழன் உடனடியாக ஏதும் யோசிக்காமல் அம்மா கூறியது போல தூரமாக சென்று இரண்டு பூட்டுகளை வாங்கினான். நேராக வீட்டை நோக்கி புறப்பட்டான். 

வீட்டுக்கு வந்தவுடன், அம்மா கூறியதை சீராக செய்தவன், கீழே பாத்து விட்டு மேலே சென்றான். அம்மா கூறியது போலவே பூட்டை மாட்டினான். அப்போது தான் கண்காணிப்பு கேமிரா வை கண்டான். அது அவள் கதவை நோக்காமல் படிக்கட்டு முடியும் இடத்தை பார்த்தது போல இருந்தது. அம்மா கூறியது போல அம்மாவுக்கு அழைத்தான். கொஞ்சம் நேரம் விட்டு அழைப்பை ஏற்றவர், " திகழா, மயூரியின் மாமா விபத்தில் தவறிட்டார் பா. அவளை தனியா அனுப்ப முடியாதுல ஆதனால் நானும் கூட வந்துருக்கேன். நீ பத்திரமா இரு," என்று அவர் கூறியதும் சற்று பதப்பட்டான். " சமீர் சாச்சா தான் வண்டி ஓட்டுறார். நாங்க அங்க சூழ்நிலையை பாத்து தான் திரும்ப முடியும், நீ ஏதும் அதிகம் யோசிக்காத, ஆனா உன்னக்கு கொஞ்சம் வேல இருக்கு,வீடு சாவி ஜன்னல் பக்கத்துல இருக்க ஜாடி ல இருக்கு. வீட்டை பாத்துக்கோ, நான் வெச்சுறேன், அப்புறம் கூப்புடுறேன்,"என்று கூறி விட்டு அழைப்பை துண்டிக்க தயாளுஅம்மாள் முயற்சிக்க, "அம்மா, அவ எப்பிடி இருக்கா?" என்ற திகழனின் குரல் தடுத்தது. மெதுவாக தன் மகனின் காதலையும் அக்கறையும் ரசித்தவர். "இப்போ பரவலா, அவள நான் பாத்துக்கிறேன். நீ வீட்டை பாத்துக்கோ", என்று கூறி விட்டு அழைப்பை துண்டித்தார்.

நடனமாடும் புதிர்Where stories live. Discover now