நீ..நீயா?

38 4 2
                                    

முத்து வால் நம்ப முடியவில்லை, அந்த ஒற்றை கை உருவத்தை பார்த்ததும் "பிரஜாபதி" என்று அவன் உதடுகள் தானாக முணுமுணுத்தது. 

"சிறந்த ஆராச்சியாளர் சிவராம், மாற்று மருந்த கண்டிப்பா கண்டுபிடிச்சிருப்பிங்க னு நான் நெனச்சது சரி தான். இந்த விருமான் பய தான், கோமா ல இருந்த மனுஷன் கொஞ்ச பொறுமையா செய்வார் னு சொல்லிட்டு இருந்தான். அதுக்கு வெச்ச டெஸ்ட் தான் இது. மனுஷன் எவ்ளோ தெளிவா திட்டம் போடுறார் பாரு. டேய் ரமேஷ் , நீ நம்ம விருமன் பையனுக்கு போன் போடு அந்த தாரா பொண்ண தூக்க சொல்லு." என்றதும் சிவராம் கதறி விட்டார். 

"வேண்டாம் பிரஜா, என்னோட மொத்த குடும்பத்தையும் இழந்து  நிக்கிறேன். அவ மட்டும் தான் என்னோட ஒரே பிடிப்பு. விட்டுடு." என்று அவர் கெஞ்சியதை பொருட்படுத்தாமல், "ரமேஷ் விருமன உள்ள போக சொல்லு, எனக்கு வீடியோ கால் பண்ணி லைவ் ஆக காட்ட சொல்லு அவ சங்க அறுக்கறதா." 

இரண்டு மூன்று நிமிடங்களில்,வீடியோ கால் வந்தது. தனது போன் ஐ அங்கு இருந்த பெரிய திரையில் இணைத்து காட்டினான்.  "தாரா" என்று சிவராமன்  கூச்சல்இட்டார். இதை ஏதும் கவனிக்காத பிரஜாபதி "அவ கதையை முடிங்க டா" என்றான். 

அடுத்த நொடி விருமனின் போன் கீழே விழுந்தது. துப்பாக்கி  சத்தமும், பிரஜாபதியின் ஆட்களது அலறல் சத்தமும் கேட்டது. சில நிமிடங்கள் கழித்து போன் எடுக்க பட்டது. "என்ன பிரஜாபதி, சௌக்கியமா? " என்றது அவனுக்கு நன்கு பரிச்சயமான குரல். சிவராம் மற்றும் முத்து இருவரும் அதிர்ந்தனர். சில ரத்த சிதறல்களை முகத்தில் துடைத்து விட்டு பேசினார் தயாளுஅம்மாள். 

தயாளுஅம்மாளை கண்டதும் மயங்கி விழுந்தார் சிவராமன். முத்து ஓரளவு எல்லாவற்றையும் யூகித்து விட்டான். சிவராமன் கூறிய அவர் பக்க கதையில் இருந்த மனிதர்களை அவனால் நினைவுகூர  முடிந்தது, இப்போது தாடியுடன் இருக்கும் சிவராமின் முகத்தை தாடியில்லாமல் திகழன் வீட்டில் புகைபடமாய்  கண்டதை பொருத்தி பார்க்க முடிந்தது. சிவராமன் தான் திகழனின் அப்பா. பெரிய திரையில் மயூரியை ஒரு கையில் அணைத்து ஒரு கையில் துப்பாக்கி பிடித்து காட்சி அளித்தார் தயாளுஅம்மாள். 

நடனமாடும் புதிர்Where stories live. Discover now