சந்தோசம் தான?

39 3 1
                                    

மதியம் தொட்டிருந்தது, முத்து அங்கு வந்த போது. அவன் வந்த வண்டியை ஓரமாக மரத்தோடு நிறுத்தி வைத்தான். மெதுவாக சுற்றி நோக்கினான். நெடிய மரங்கள், அடர்ந்த கால் உயர புற்கள், அங்கு மனிதர்கள் வந்தது இல்லை என்பது போல இருந்தது, புற்களை நகர்த்திக்கொண்டு உள் நோக்கி சென்றான். கொஞ்ச தூரம் நடந்ததில் கிடைத்த சில சிகரெட்டு துண்டுகள் யாரோ இங்கு உள்ளனர் என்பதை உறுதி படுத்தியது. மேலே முன்னேறியவனுக்கு எந்த வீடோ, அல்லது கட்டிடங்களோ கண்ணில் படவில்லை. மெதுவாக முன்னேறியவன் அங்கு இருந்த மரத்தில் இருந்த செயற்கையாக செதுக்கி இருந்த வட்ட குறிப்பு கண்ணில் பட்டது. அதுபோல் அங்கு இருந்த எந்த மரத்திலும் இல்லை. அந்த மரத்தை சுற்றி எதாவது கிடைக்கும் என்று தேடினான். அப்போது தான் கவனித்தான், அந்த மரத்தில் சிசிடிவி பொருத்தி இருந்ததை. தான் மாட்டி கொண்டோம், தனியாக வந்தது தவறு என்று அப்போது தான் நினைத்தான். அடுத்த நொடி கையில் போன் ஐ எடுத்தான், அதில் சுத்தமாக நெட்ஒர்க் இல்லை. வேகமாக வந்த வழி ஓட ஆரம்பித்தான். நெட்ஒர்க் கோடுகள் கொஞ்சம் தெரிந்தது, அவன் கையில் இருந்த செயலியை இயக்க முயற்சித்தான். ஆனால் தலையில் எதோ பெரியதாக தாக்கியதில் சுருண்டான். இருந்த கடைசி நினைவில், கையில் இருந்த போன் ஐ தூரம் எறிந்தான். அதில் நெட்ஒர்க் கோடுகள் முழுதாக ஏறியது, அவன் கடைசியாக கொடுத்த உத்தரவை வெற்றிகரமாக செய்து முடித்தது. 

மயங்கிய முத்துவை விருமான் அனாயசமாக தூக்கி தோளில் போட்டு நடந்தான். அவனை கண்டதும் "இவனையும் கவனிக்க சொல்லுங்க, அந்த 20 பேரோட 21 ஆவது ஆளா இவனும் இருக்கட்டும். எப்பிடி நம்மள கண்டுபிடிச்சான் னு தெரியல." என்றான் ரமேஷ். விருமன் பாதுகாப்பு உடை அணிந்து கொண்டு சிவராம் வேலை செய்யும் இடத்திற்குள் முத்துவை கை கால் கட்டிய படி தூக்கி வந்து போட்டான். "இவனையும் கணக்குல சேத்துக்கோ,இவன் நம்மள வேவு பாக்க வந்தவன். கொஞ்ச நேரத்துல மயக்கம் தெளிஞ்சுரும், நீ அதனால எப்பயும் தர மயக்க ஊசி குடுத்துட்டு வேலைய பாரு. " சிவராம் பாவமாக பார்த்தார் முத்துவை. 

நடனமாடும் புதிர்Where stories live. Discover now