வைட் ஷர்ட்

30 3 2
                                    

கதவை திறக்க அங்கு கை முழுக்க சாப்பாடு பொட்டலங்களோடு அலர் இருந்தாள்.  உள்ளே மயூரியை கண்டதும், கையில் இருந்த பொட்டலங்களை அவள் கைகளில் பாதியை வைத்தாள். "நீங்க?" என்று மயூரி கேட்டதை கேட்டும் பதில் சொல்லாமல் ஆசுவாசமாக சோபாவில் அமர்ந்தாள். 

நிமிர்ந்து மயூரி முகத்தை உற்று பார்த்தாள் அலர். ஓரிரு நிமிடத்தில் "வைட் ஷர்ட்" என்று கூச்சல் இட்டு கத்த தொடங்கினாள். மயூரி முன்பே பயந்து போயிருக்க, யாரோ தெரியாத ஒருவர் வந்து சாப்பாடு பொட்டலங்களை குடுத்து விட்டு திடிரென்று கத்த, மிரண்டு தான் போனாள். அலர் வேகமாக கட்டிக்கொண்டாள் மயூரியை. இன்னும் கலவரமானாள் மயூரி. 

வாசலில் கார் சத்தம் கேட்டது. திகழன் முத்து உடன் முதலில் உள்ளே வந்தான். திகழனை கண்டதும் அலரின் பிடியை உதறி விட்டு திகழனை  சென்று அணைத்து கொண்டாள் மயூரி . திகழன் ஒரு நிமிடம் சிலிர்த்து விட்டான். "என்ன ஆச்சு டா தங்கம்?, நான் வந்துட்டேன்." என்றான் அவளை இன்னும் தனக்குள் அணைத்தவாறு. "அவங்க யாரோ உள்ள வந்து சத்தம் போட்டு என்ன கட்டிப்பிடிச்சு," என்று தயங்கி தயங்கி சொல்ல, இதை கேட்ட முத்து, "அடியே வள்ளி,ஒரு சின்ன புள்ளய என்ன பண்ண?" என்று அலரை வம்பிழுத்தான். "என்னங்க, நீங்க வேற. உங்களுக்கு அவளை அடையாளம் தெரியலையா?" என்றாள் அலர். 

இவர்கள் பேசி கொள்ளவும், தான் திகழனை அணைத்து நிற்பதை உணர்ந்து அவனிடம் இருந்து விலகி நிற்க மயூரி முயற்சி செய்ய, அவளை அணைப்பில் இருந்து விலக்கி வலது பக்க கைக்குள் அணைத்து நிற்க வைத்தான் திகழன். "அலர், என்ன சொல்ல வர? " என்றான் திகழன். "திகழ் நீ பார்க்கல, முத்து உனக்கு ஞாபகம் இல்லையா NSS கேம்ப் 9த் படிக்கும் போது, வைட் ஷர்ட் டா" என்றாள் அலர். 

முத்து கத்தி விட்டான், "இது சத்தியமா இன்னைக்கு நடந்த எல்லாம் அதிர்ச்சிய விட பெரிய அதிர்ச்சி டா, இந்த பொண்ணு தான் இவன் அத்தை பொண்ணு. இந்த பொண்ண மட்டும் இவன் அன்னைக்கே சந்திச்சிருந்தா...., நினைக்கவே சிலிர்க்குது பா" என்று அலரை பார்த்து பேசினான்.

நடனமாடும் புதிர்Where stories live. Discover now