பின் நோக்கி நகர்வோம் -2

35 4 3
                                    

பாதி தூக்கத்தில் இருந்த திகழை தூக்கி கொண்டு ஒரு மறைவிடத்தில் ஒளிந்து கொண்டார்.

வந்தவர்கள் எதையோ தேடியது போல தெரிந்தது. ஒருவன் பேசியது தயாளுவிற்கு தெளிவாக கேட்டது. "மொத்த குடும்பமும் செத்து போய்ட்டாங்க. அவங்க கூட அவங்க வெச்சிருந்த பதிவும் எரிஞ்சு போச்சு, வீட்ல ஏதும் இருக்க மாறி தெரியல. எல்லாம் வீண். அவனை நேர்ல மிரட்டி பதிவெல்லாம் வாங்கி இருந்திருக்கலாம். பேசி பாக்கலாம் னு பேசி, அவன் ஊர விட்டு ஓட முயற்சி பண்ணி, ச்சை " என்றான்.

அவர்கள் எல்லாம் வீட்டை விட்டு போனதை உறுதி படுத்தி கொண்டு, வெளியே வந்த தயாளு, முதலில் சென்றது அவர்கள் சாமி மடத்திற்கு தான். அங்கு தான் "சரவண பவ" எழுதி வைக்கும் காகிதங்களுக்கு மத்தியில் அவர் முக்கிய பதிவுகளும் இருக்கும். தயாளு எதிர்பார்த்தது போலவே சிவராமின் ஆராய்ச்சி பதிவுகள் அங்கு தான் இருந்தனர். அன்று இரவே தனது நம்பகமான உடன் பணிபுரிவோர் உதவியுடன் சென்னைக்கு வந்துவிட்டார்.

முழுதாக காதல் கணவன் அன்பு தோழி என்று அனைவரையும் இழந்து அனாதையாக நின்ற தயாளு விற்கு ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிர்ந்தது திகழன். தந்தை அத்தை மாமா அத்தை மகள் எல்லாரையும் கேட்டு சில நாட்கள் அடம் பிடித்தாலும் அதை பற்றி கேட்கும்போது தாய் உடைந்து அழுவதை கண்டு கொஞ்ச நாட்களில் அமைதியாகி போனான். அம்மாவிற்காக ஏதும் செய்தான். பள்ளியில் நன்றாக படித்து விட்டு, வீட்டில் எல்லா வேலைகளையும் அம்மாக்காக செய்வான். அவன் உதவியால் தான் மீண்டும் வேலையில் சேர்ந்தார்.

ஆனால் தயாளுவோ அல்லது திகழொ எதிர்பார்க்காத ஒரு விஷயம் சிவராம் அந்த விபத்தில் பிழைத்து கோமாவில் இருந்தது தான். அவருக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் தான் அவரை காப்பாற்றி பராமரித்தார். ஆனால் ஆதாயம் இன்றி இந்த உலகில் ஏதும் நடப்பதில்லையே. அவரை கோமாவில் இருந்து மீட்ட அந்த சுயநல மிருகம்,அவர் முழித்ததும் அவரிடம் நல்ல விதமாக பேச, அவர் அவனை நம்பி தன் தங்கை மகள் உயிருடன் இருப்பதாய் கடைசியாக கண்ட காட்சியை கூறினார். அவர் சிறிதும் நினைக்கவில்லை, அது அவர் தங்கை மகளின் உயிரை பணயமாகமாற்றும் என.

நடனமாடும் புதிர்Where stories live. Discover now