புளிக்குழம்பும் உளுந்து அப்பளமும்

35 4 5
                                    

நாட்கள் நகர்ந்ததில் பிரச்சனைகளும் வலுத்தது, அவர்கள் அந்த கிராமத்தில் இருந்த நோயை மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினாலும் பாதிக்க பட்ட  ஒரு வரை கூட காப்பாற்ற முடியவில்லை. புதிதாக இன்னொரு கிராமத்தில் இதே போல் அறிகுறியுடன் ஒரு நால்வர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டனர். நொந்து போனாள் அலர். பல முயற்சிகள் எடுத்தும் ஏதும் பயனில்லை, அந்த நுண்ணுயிரை தனியாக பிரித்து இனம் காண முடியாமல் திணறினர். 

அது அவர்களது வெள்ளை அணுக்களில் இருப்பது சில நாட்களுக்கு பிறகு கண்டு பிடித்தனர். ஆனால் அதற்குள் இன்னொரு கிராமத்தில் நோய் பரவியது. நிம்மதி இழந்தனர் அலரும் அவள் சகாக்களுக்கும். 

இதற்கு இடையில் அவர்களது உறுதி விஷேஷம் நடந்தது, காரில் தனித்து வந்து தனித்து இருந்து விட்டு விஷேஷம் முடித்து திருமண தேதி முடிவு செய்தனர். அப்போது தான் மனோ அண்ணா வை கண்டாள். "அண்ணா, எங்க போயிருந்திங்க," என்று அவள் விசாரித்த போது ஏதும் சொல்லாமல் மனோ சென்று விட்டான். அலரின் அம்மாவிடம் கேட்டபோது , அவன் சென்னை சென்று வந்ததாக கூறினார். அலருக்கு எதோ உறுத்திய போதும் விஷேஷ வேளையில் அதை மறந்து போனாள். மீண்டும் சென்னைக்கு அதே நாள் திரும்பினர்.

அடுத்த அடுத்த நாள் அந்த புது கிராமத்தில் இருந்த தொற்று கோர ஆட்டத்தை ஆடியது, தனிமைப்படுத்த பட்டும் ஊரடங்கு உத்தரவிட்டும் பலி 40 பேரை எட்டியது. கண் மூடி திறப்பது போல இருந்தது ஒவ்வொரு நாளும் அலருக்கு. எப்படி தொடங்குகின்றது எப்படி முடிகின்றது ஏதும் புரியாமல் ஓடியது நாட்கள்.

காலை உணவை மறந்து நேராக தன் வெள்ளை கோட்டுக்குள் புகுந்து கொண்டவள், மனதில் நேற்று இரவு கற்பனை செய்து பார்த்த ஒன்றை செயல்படுத்தி பார்க்க உள்ளே நுழைந்தவளை நிறுத்தியது முத்துவின் கோப குரல்" எத்தனை நாளா நடக்குது இது?", அவன் கோவம் புரிந்த போதும், பேச வலுவில்லாமல், "எத சொல்லறீங்க ங்க" என்றாள். "எத்தனை நாளா காலைல சாப்பிடாம வேல செஞ்சுட்டு இருக்க?", பதில் பேசாமல் நின்றவளை கையை பிடித்து இழுத்து சென்றான். இட்லி பொங்கல் வடை என்று தட்டில் உணவை நிரப்பினான். அவளுக்கு ஊட்ட ஆரம்பித்தான். நல்ல பிள்ளையாக சாப்பிட்டாள். வாயை துடைத்து விட்டான். 

நடனமாடும் புதிர்Where stories live. Discover now