வணக்கம்

111 6 4
                                    


அன்புடையீர் வணக்கம். 

இந்த கதைக்கு ஒரு முன்னோட்டத்தை பாப்போம். 

ஒரு பக்கம்..இயல்பாக காதலில் விழும் கதாநாயகன் மற்றும் கதாநாயகி. ஆனால் அவர்களுக்கு பின்னால் மறைந்து நிற்கின்றது அவர்களது கடந்த காலத்தில் நடந்த கசப்பான சம்பவங்கள். அந்த கசப்பு காதலின் தித்திப்பை கெடுக்குமா, கூட்டுமா?


**********************************************************************


இன்னொரு பக்கம்...NIA(National Investigative Agency ) வில் பணிபுரியும் காதல் ஜோடி அவர்களுக்கு சவாலாக பரவும் நோய் ஒன்று. அதற்கு பலியாகும் அவர்களுக்கு நெருக்கமான ஒருவர். நோயிற்கான மருந்தை தேடி அவளும், நோய் செயற்கையாக பரவுகின்றது என்று கண்டுபிடித்து பரப்பும் கயவர்களை தேடி செல்லும் அவனும், வெற்றி கண்டனரா? இந்த இரண்டு பக்கங்களும் சந்திக்கும் சுவாரஸ்யமான கதை தான் "நடனமாடும் புதிர்".


முன்பே ஆங்கிலத்தில் கதைகள் எழுதி இருக்கிறேன், ஆயினும் தமிழில் இதுவே என் முதல் கதை. படித்து தங்கள் கருத்துக்களை பதிவிடவும். 


குறுநாவலாக எழுதுகின்றேன். ஒரு 12 பாகங்களில் கதையை முடித்து விட திட்டமிட்டு உள்ளேன். தினமும் பதிவுகள் போட முடிவு செய்து இருக்கிறேன். என்னுடைய ஆங்கில கதை ஒன்றை பாதியில் நிறுத்தி இருக்கின்றேன், அதையும் தொடர முடிவு செய்து இருக்கின்றேன். அதையும் என்னுடையும் profile பக்கதில் பார்த்து படிக்கலாம். 

தினம் உங்கள் கருத்துக்களுக்காக காத்திருப்பேன். ஒரு எழுத்தாளனுக்கு பெரிய ஊக்க மருந்து படிப்பவரின் கருத்துக்கள் தான். முதல் பாகத்தில் விரைவில் சந்திப்போம்.

நன்றி.

என்றும் அன்புடன்,எழில்ஹரிஷ்

நடனமாடும் புதிர்Where stories live. Discover now