ஆசைமிகு அம்மாவுக்கு...

4 1 1
                                    


பத்துத்திங்கள் கருவறைக்குள்ளே
அடைந்திருந்ததோ நான்...
சிறை வாசம் அனுபவித்த
தென்னவோ நீ தான்!

என திருதயக் கோயிலில்,
தெய்வம் நீயே, என் தாயே!
என துயிரூற்றி, அகத்தில் சுடரேற்றி,
வணங்கி வாழ்வேனே!

மதி யொளியில், மடியோடு ஊஞ்சலிட்டு...
ஆதவன் கண் படாமல், முந்தானையில் மூடி வைத்து,
அண்டம் ஆகாச மெல்லாம் மறந்து,
பிள்ளைக்கென வாழும் புனிதமே!
மண் பொன் னெல்லாம் துறந்து,
உன தடிகள் பற்றும் மனிதமே!

ஏனோ உன்னைப் பற்றி எழுதும் வேளை,
திணறிப் போகிற தென் தமிழே!

'அம்மா!' என்னும் ஒற்றைச் சொல்லை,
மொழிவதோடு தொண்டை தான் அடைக்கிறதோ?

நான்...
கண்ணீர் துளிகள் சேர்த்து,
முத்து மாலை கொணர்ந்தேன்!
நீ...
உதிரம் உருக்கி வார்த்து,
தாய்ப் பாலூட்டினாய்!

நான்...
இவ்வுலகம் மொத்தம் நீ வலம் வரவே,
ஆகாய முகிலினங்களை தரையிறக்கினேன்!
நீ...
மழலையா யிருந்த எனைத் தூக்கிச் சுற்றிய போதே,
'கண்டேன் பிரபஞ்சம் எல்லாம்', என்றாய்!

அழகிய பொய்களில் தோய்த்தெடுத்தச் சொற்களே,
கவிதை யெனும் மாலையாகும்!
உனக்கென எழுதுகையில் மட்டும்,
மெய்களில் முளைத்த சோலையாகிடுதே!

கவிக்கிளை Où les histoires vivent. Découvrez maintenant