பூக்கடல்

3 1 1
                                    

எனது ஆருயிரே!
உடன் வாராயோ?

பூக்கடல் போன்றவள் நீயே!
அக்கினி வார்த்த பனித்துளி நீயே!
எனது உடல், பொருள், ஆவி நீயே!
என் மனப் பரப்பை அளந்தவள் நீயே!

காலைப் பொழுதோடு,
உன் கனவுகள் கலைத்து எழுகிறேன்!
மாலைப் பொழுதோடு,
உன் நினைவுகள் விதைத்து உழுகிறேன்!

கரைத்தாயே இவனை முழுதாய்!
எவ்வாறு தானோ அதைச் செய்தாய்?
மனமெங்கும் உன்னைத் தாங்கினும்,
கனமின்றி இலேசாகிறேனே, 'எப்படி?', சொல்வாய்!

தூக்கம், அதை நீ கெடுத்தால், சிரிக்கிறேன்!
உணவை, நீ அழைத்தால், மறக்கிறேன்!
இசையை, உன் குரலில் இரசிக்கிறேன்!
மௌனத்தை உன் பார்வையால் திறக்கிறேன்!

நம் உலகம், நம்மோடு முடிந்து போக,
காலம் தவற விட்ட துகள் ஆகிப் போனேன்!
என் சரி பாதி நீயே உருவாக,
முழுதாய் உன்னிடம் தொலைய தயாரானேன்!

கவிக்கிளை Where stories live. Discover now