இதமான மாலை

4 2 1
                                    

ஒரு புல் நுனியின் மேலே,
பூத்த பனித்துளியில்,
உந்தன் முகம் கண்டேன்!
சிறு ஓடை ஒன்றன் இடையில்,
பிரகாசித்த ஒளியில்,
உந்தன் ஸ்பரிசத்தை உணர்ந்தேன்!

தலையை உயர்த்திப் பார்க்கையில்,
வானெங்கும் நீயே தான்!
மெய் மறந்து அப்படியே நடக்கையில்,
விழுந்தேன் உன்னுள்ளே தான்!

கவிப்புயலாய் என்மேல் வீசுகின்றாய்!
சின்னஞ்சிறு சீர்களாக நான் உடைகிறேன்!

தவழ்ந்து வரும் மழைக்காற்று,
தனது ஈரக் கையால் வருடும் போது,
உனைக் காணும் ஏக்கம் வந்து,
கண்கள் இரண்டிலும் கரிக்கும் அருவி யோடுது!

மிதமான மாலைப் பொழுதும்,
இதமாக பரவும் மனதுள் உன் நினைவும்!
கரைந்து போகிறது என் உயிரும்!
ஒன்றோ ஏக்கத்தில், நானும் மெழுகும்?

கவிக்கிளை Where stories live. Discover now