எனை வீழ்த்தியவளே!

4 1 1
                                    

சிறு ஓரப் பார்வையாலே,
என்னை ஒரு ஓரம் சாய்த்தவளே!
குறுகுறு மின்னல் விழியாலே,
என்னை விண்ணில் சேர்த்தவளே!

முதன்முதலில் பருக்கள்
அழகாய்த் தெரிந்தது உன்னிடமே!
முதன்முதலாய் தெருக்கள்,
குழம்பி நீண்டது உன்னாலே!

பேசும் கண்களை வைத்தபடி,
எனது உயிரை நீ மேய்கிறாய்!
வீசும் தென்றலின் கூற்றின்படி,
எந்தன் சுவாசம் நீ ஆகிறாய்!
என் ஆதியும் அந்தமும்,
உன் நினைவோடு தான் கரைந்துபோகுதோ?
வீண் சாதியும் பேதமும்,
நம் காதலில் மறைந்துபோகுதோ?

உன் ஸ்பரிசம் பேசும் மொழி,
காட்டிடுதே எனக்கு ஜீவ-ஒளி!

நடந்து நீ தான் செல்லும் வழி,
அந்தத்தடம் பதியுதே எனது விழி!

அசையாத பாறையை உடைத்தவளே!
மழலை மனதால், எனை வீழ்த்தியவளே!

கவிக்கிளை Where stories live. Discover now