நிழல்

1 0 0
                                    

ஒளி யலைகள் விழி சேர,
களி வெள்ளம் ஓய்ந்து போக,
கசக்காமல் விரல் சேர்க்கும்,
நிசப்தத்தில் நிழல் பூக்கும்!

ஒற்றைக் கால் மரங்களே!
கற்றையாய் நிழல் வீசுவீர்களே!
ஓசைகள் ஒரு புறம் ஒதுங்கிட,
இசையாக மௌனம் பேசிடுதே!

புவியோடு விளையாடும்,
நிழல் வலை போடும் மேகங்களே!
கவியோடு நடைபோடும்,
குழலாடும் சதையில்லா தேகங்களே!

பட்டப் பகலிலே,
எட்டிப் பார்க்கும்,
குட்டி இரவுகளே!
வெட்ட வெளியில்,
நடந்து செல்கையில்,
ஒட்டி வரும் தோழர்களே!

இளைப்பாறும் இதயத்தில்,
நிழலாய் இன்பம் சிரித்திடுமே!
பிழை யில்லா நல்லுள்ளத்தில்,
அழகாய் இதழ் விரித்திடுமே!

பூவின் நிழலோ,
அதன் வாசம் அறிவதில்லை!
எனினும்,
உதிர்ந்து சாகும்போதும்,
விட்டுப் பிரிவதில்லை!

கவிக்கிளை Where stories live. Discover now