புத்துயிர் வாசம்

3 1 0
                                    

அந்தி வானம் அடங்கியிருக்க,
வந்த சூரியன் துயில் எடுக்க;
மெதுவாக, ஆழகாக வானிலை மாற,
ஏதுவாக பிறந்த கவிதையில் பசியாற.

புத்துயிர் வாசம்...
எத்திசை தோறும்,
கட்டிப் போடும் அழகு!
சுற்றிப் பார்க்கப் பழகு.

இலைகள் அசையும் பொழுது,
மனதுள் இசைகள் பிறக்கிறதே!
பறவைகள் வானில் சிறகடிக்க,
உயிரும் உடன்சேர்ந்து பறக்கிறதே!

மனதை சலவை செய்ய வந்த மழை,
பூமியை நனைத்து, விசும்பி எழச்செய்ததே!
துளித்துளியாய் மண்ணில் விழுந்து,
இரசனையின் இன்பப் பள்ளத்தாக்கில் விழச்செய்ததே!

கண்கள் காணும் திசை யாவும்,
கவின்மிகு இயற்கையின் வர்ணஜாலம்;
இலேசாக மனதும் மாறி,
காற்றோடு கரைந்து தான் போக...
பேசாமல் இத்தனை பேசும் சூழலோடு,
நான் ஒழுகி மறைந்தே போனேனே!

கவிக்கிளை Where stories live. Discover now