5.

965 82 10
                                    

இர‌வு 9 ம‌ணி:

முல்லை ச‌ம்யுக்தைக்கு உண‌வு கொண்டு வ‌ந்தாள்.

"அர‌சியாரே உங்க‌ளுக்கு உண‌வு கொண்டு வ‌ந்து இருக்கிறேன்"என்றாள்.
ச‌ம்யுக்தை அவ‌ள் ப‌டுக்கையில் சுருண்டு ப‌டுத்து இருந்தாள்.

"இதையாவ‌து சாப்பிடுங்க‌ள்.காலையில் இருந்து எதுவும் சாப்பிட‌வில்லை"என்றாள்.

"என‌க்கு எதுவும் வேண்டாம்"என்றாள் ச‌ம்யுக்தை.
முல்லை அவ‌ள் அருகில் அம‌ர்ந்தாள்.

"என்ன‌ முடிவு எடுத்து இருக்கிரீர்க‌ள்"என்றாள் முல்லை.
ச‌ம்யுக்தை இப்போது எழுந்து அம‌ர்ந்தாள்.

"எதை ப‌ற்றி"என்றாள்.

"நாளை இங்கே இருந்து செல்வ‌தை ப‌ற்றி"என்றாள் முல்லை.

"நான் போக‌ போற‌து இல்லை"என்றாள் ச‌ம்யுக்தை.

"அவ‌ர்க‌ள் விட‌ மாட்டார்க‌ள்"
"என்னை மிர‌ட்டி ப‌டிய‌ வைக்க‌ முடியாது"என்றாள் ச‌ம்யுக்தை.

"உண்மை ஆனால் எதிரியின் ப‌ல‌ம் தெரியாம‌ல் நாம் எதிர்க்க‌ முடியாது."என்றாள் முல்லை.
"என்ன‌ சொல்கிறாய்"என்றாள் ச‌ம்யுக்தை.

"அவ‌ர்க‌ள் மிக‌ மோச‌மான‌வ‌ர்க‌ள்.முர‌ண்டு பிடிப்ப‌தில் அர்த்த‌மில்லை"என்றாள் முல்லை.

"அத‌ற்காக‌ அவ‌ர்க‌ளிட‌ம் என்னை செல்ல‌ சொல்கிறாயா"என்றாள் கோவ‌மாக‌.

"இல்லை அர‌சியாரே.அவ‌ர்க‌ள் போக்கில் சென்று அவ‌ர்க‌ளை வீழ்த்த‌லாம் என்கிறேன்"என்றாள் முல்லை.

"நீங்க‌ள் செல்ல‌ ம‌றுத்தால் உங்க‌ளை ம‌ட்டும் இல்லை இந்த‌ ஊர் ம‌க்க‌ள்சியும் கொடுமை ப‌டுத்துவார்க‌ள்.அதை ந‌ம் அர‌ச‌ரின் ஆத்மா விரும்பாது.நீங்க‌ள் தைரிய‌மாக‌ செல்லுங்க‌ள்.உங்க‌ளுக்கு நான் க‌ருந்தேள் விஷ‌ம் ஏற்பாடு செய்து த‌ருகிறேன்.உங்க‌ள் க‌ற்ப்புக்கு எதுவும் ஆப‌த்து வ‌ரும் நேர‌த்தில் அதை அந்த‌ க‌ய‌வ‌னுக்கு க‌ல‌ந்து கொடுத்து கொன்று விடுங்க‌ள்"என்றாள்.

ச‌ம்யுக்தை எதுவும் சொல்லாம‌ல் யோசித்துக் கொண்டு இருந்தாள்.
"அவ‌ச‌ர‌ம் இல்லை.இர‌வு முழுவ‌தும் யோசித்து ந‌ல்ல‌ முடிவை எடுங்க‌ள்"என்று கூறிவிட்டு வெளியே சென்றாள் முல்லை.

மாவீர‌ன் பார்த்திப‌ன்Where stories live. Discover now