8.

851 90 6
                                    

காலை 5.00 ம‌ணி

ச‌ம்யுக்தை ந‌ன்கு உற‌ங்கிக் கொண்டு இருந்தாள்.க‌த‌வு த‌ட்டும் ச‌த்த‌ம் கேட்ட‌து ஆனால் அவ‌ள் விழிக்க‌வில்லை.மீண்டும் க‌த‌வு ப‌ல‌மாக‌ த‌ட்ட‌ப்ப‌ட்ட‌து.திடுகிட்டு விழித்தாள்.வேக‌மாக‌ சென்று க‌த‌வை திற‌ந்தாள்.
ப‌ணி ஆள் ஒருவ‌ன் நின்று கொண்டு இருந்தான்.

"ம‌ன்ன‌ர் உங்க‌ளை ப‌யிற்சிக்கு த‌யார் ஆக‌ சொன்னார்"என்றான்.

"என்ன‌ ப‌யிற்சி.நான் எந்த‌ ப‌யிற்சிக்கும் போக‌ த‌யாராக‌ இல்லை"என்றாள்.

"இன்னும் அறை ம‌ணி நேர‌த்தில் நீங்க‌ள் த‌யாராக‌ இருக்க‌ வேண்டும் என்ப‌து ம‌ன்ன‌ரின் க‌ட்ட‌ளை"என்றான்.
ச‌ம்யுக்தை ம‌றுத்து பேசும் முன்ன‌ர் அவ‌ன் சென்று விட்டான்.

"என்ன‌ ப‌யிற்சி இந்த‌ நேர‌த்தில்.தூங்க‌ விடாம‌ல் என் உயிரை எடுக்கிறான்"என்று புல‌ம்பிக் கொண்டே வெளியே வ‌ந்தாள்.குளிக்கும் அறைக்கு சென்றாள்.த‌ண்ணீரை தொட்டு பார்த்தாள்.மிகுந்த‌ குளிர்ந்த‌ நீராக‌ இருந்த‌து.ப‌ணி பெ‌ண் ஒருத்தியை அழைத்தாள்."ஏன் நீர் இவ்வ‌ள‌வு குளிராக‌ இருக்கிற‌து.வெண்ணீர் இல்லையா"என்றாள் ச‌ம்யுக்தை.

"வெண்ணீர் இருக்கிற‌து ஆனால் நீங்க‌ள் குளிர்ந்த‌ நீரில் தான் குளிக்க‌ வேண்டும் என்ப‌து ம‌ன்ன‌ரின் க‌ட்ட‌ளை"என்றாள்.
ச‌ம்யுக்தை த‌ன‌க்குள் முன‌ங்கிக் கொண்டாள்.குளித்துவிட்டு வெளியே ந‌டுங்கிக் கொண்டே வ‌ந்தாள்.ப‌ணி பெண் ஒருத்தி ஒரு ஆடையை கொடுத்து.இதை அணியுங்க‌ள் என்றாள்.

"நான் இதை அணிய‌ கூடாது.நான் வெள்ளை நிற‌ம் தான் அணிய‌ வேண்டும்"என்றாள் ச‌ம்யுக்தை.

"இது ம‌ன்ன‌ரின் க‌ட்ட‌ளை அம்மையே"என்றாள் ப‌ணிப்பெண்.
த‌ன் அறைக்கு வ‌ந்து க‌த‌வை சாத்திக் கொண்டு அந்த‌ ஆடையை வீசி எரிந்தாள் ச‌ம்யுக்தை.

"என்ன‌ நினைத்துக் கொண்டு இருக்கிறான்.காலையில் எழுப்பி விடுகிறான்.குளிர்ந்த‌ நீரில் குளிக்க‌ சொல்கிறான்.அவ‌னுக்கு பிடித்த‌ ஆடையை அணிய‌ சொல்கிறான்.நான் என்ன‌ அவ‌ன் அடிமையா"என்றாள்.
அவ‌ள் ம‌ன‌சாட்சி"ஆம் நீ அவ‌ன் அடிமை தான்.ம‌ற‌ந்துவிட்டாயா"என்ற‌து.
பெருமூச்சு விட்டுக் கொண்டு த‌யாராகி வெளியே வ‌ந்தாள்.அவ‌ளை அர‌ண்ம‌னையில் இருந்து பின் புற‌ம் சிறிது தொலைவில் இருக்கும் ஒரு மைதான‌த்துக்கு அழைத்து வ‌ந்த‌ன‌ர்.அங்கே அவ‌ளை போல‌ ப‌ல‌ நூறு பெண்க‌ள் இருப்ப‌தைக் க‌ண்டு அதிர்ச்சி அடைந்தாள்.ப‌ல‌ பெண்க‌ள் க‌த்தி ச‌ண்டையும் க‌ள‌றியும் வாள் ப‌யிற்சியும் செய்வ‌தை க‌ண்டு அவ‌ள் க‌ண்க‌ள் விறிந்த‌து.ஒரு ஓர‌த்தில் பார்த்திப‌ன் வாள் ப‌யிற்சி எடுத்துக் கொண்டு இருப்ப‌தை பார்த்தாள்.அவ‌ன் ப‌டை வீர‌ர்க‌ள் ஒவ்வ‌ருவ‌ரோடும் ச‌ண்டியிட்டு வென்று கொண்டு இருந்தான்.

மாவீர‌ன் பார்த்திப‌ன்Where stories live. Discover now