23.

768 85 7
                                    

ம‌றுநாள் காலையில் பார்த்திப‌ன் குடிலுக்கு வ‌ந்தான்.அஞ்ச‌னை அவ‌ள் செய்து கொண்டு இருந்த‌ வித‌வை சிலைக்கு வ‌ண்ண‌ம் தீட்டிக் கொண்டு இருந்தாள்.
குருவும் த‌ருமியும் க‌ல்லை சிற்ப‌மாக‌ மாற்றிக் கொண்டு இருந்த‌ன‌ர்.

பார்த்திப‌ன் உள்ளே நுழைந்தான்.
"வ‌ண‌க்க‌ம் முத்துலிங்க‌ பிள்ளையே"என்றான்.

த‌ருமி இவ‌னை க‌ண்டு ந‌டுங்கினான்.

"குருவே இவ‌ர் மாற‌ன்.பார்த்திப‌னின் ப‌டை த‌லைவ‌ன்.இவ‌ரின் சிலையை வ‌டித்து த‌ருவ‌தாக‌ நான் வாக்கு கொடுத்து இருக்கிறேன்"என்றாள் அஞ்ச‌னை.

"நல்ல‌து அஞ்ச‌னை.என‌க்கு வெளியில் ஒரு வேலை இருக்கிற‌து நானும் த‌ருமியும் சென்று வ‌ருகிறோம்"என்று கூறிவிட்டு பார்த்திப‌னை பார்த்து சிரித்தார் முத்துலிங்க‌ பிள்ளை.
பார்த்திப‌ன் அவ‌ரை பார்த்து  த‌லை அசைத்தான்.

"அம‌ருங்க‌ள் மாற‌ன்.ஒரு ப‌த்து நிமிட‌ம் காத்திருங்க‌ள்.இதை முடித்துவிட்டு வ‌ந்து விடுகிறேன்"என்றாள் அஞ்ச‌னை.
பார்த்திப‌ன் அவ‌ள் அருகில் சென்று அம‌ர்ந்தான்.
அவ‌ள் சிலைக்கு வ‌ண்ண‌ம் தீட்டிக் கொண்டு இருந்தாள்.பார்த்திப‌ன் அவ‌ளை ர‌சித்துக் கொண்டு இருந்தான்.

"பெண்ணாகிய‌ நீ இந்த‌ க‌லையை க‌ற்க‌ உன‌க்கு எப்ப‌டி ஆர்வ‌ம் வ‌ந்த‌து."என்றான் பார்த்திப‌ன்.

"பெண்க‌ள் ஏன் இதில் ஆர்வ‌ம் காட்ட‌ கூடாது என்று நினைக்கிறீர்க‌ள்"என்றாள் அஞ்ச‌னை.

"சிற்ப‌ க‌லை என்ப‌து ஆண்க‌ளுக்கே உரிய‌து என்று நான் கூற‌வில்லை ஆனால் க‌ல்லை உடைத்து சிற்ப‌ம் செய்வ‌து பெண்க‌ளுக்கு க‌டின‌மான‌து என்று நான் நினைக்கிறேன்"என்றான்.

"எப்ப‌டிப‌ட்ட‌ க‌டின‌மான‌ க‌லையையும் க‌ற்றுக் கொண்டு சிற‌ப்பாக‌ செய்யும் ஒரு அரிய‌ ம‌ந்திர‌ ச‌க்தி எங்க‌ளிட‌ம் உள்ள‌து"என்றாள்.

"என்ன‌ ம‌ந்திர‌ சக்தி அது"என்றான்.

"பெண்க‌ளுக்கு ம‌ட்டுமே இருக்கும் ஒரு அரிய‌ ச‌க்தி.ஆண்க‌ளுக்கு அது இல்லை"என்று கூறி சிரித்தாள்.

மாவீர‌ன் பார்த்திப‌ன்Where stories live. Discover now