22.

803 81 9
                                    

த‌ன்னை அவ‌ம‌தித்த‌ பெண்ணை ப‌ற்றி கேட்ட‌ போது பார்த்திப‌ன் மிகுந்த‌ ஆத்திர‌ம் அடைந்தான்.

"அந்த‌ சிற்பியை என் குதிரையில் தூக்கி போட்டுக் கொண்டு வ‌ர‌ட்டுமா அர‌சே"என்றான் ஒரு வீர‌ன்.

"வேண்டாம் நானே அங்கு செல்கிறேன்.என்னை ம‌றுத்து பேசிய‌ பெண்ணை நான் பார்க்க‌ வேண்டும்.அவ‌ளுக்கு நான் பாட‌ம் புக‌ட்ட‌ வேண்டும்.அதை க‌ண்டு என்னை எதிர்த்து பேச நினைப்ப‌வ‌ர்க‌ளுக்கு ஒரு ப‌ய‌ம் ஏற்ப‌ட‌ வேண்டும்"என்றான் பார்த்திப‌ன்.

ம‌றுநாள் அவ‌ன் த‌ன் இரு வீர‌ர்க‌ளோடு அங்கே சென்றான்.
தூர‌த்தில் குதிரையை நிறுத்திவிட்டு குடிலுக்கு ந‌ட‌ந்து சென்ற‌ன‌ர்.

குடிலின் உள்ளே எட்டி பார்த்தான்.
அஞ்ச‌னை ஒரு சிற்ப‌த்தை ர‌சித்து செய்து கொண்டு இருந்தாள்.
பார்த்திப‌ன் அவ‌ள் அழ‌கில் சொக்கி போனான்.அவ‌ளை க‌ண்ட‌தும் காத‌லில் விழுந்தான்.
அவ‌ளையே ர‌சித்துக் கொண்டு இருந்தான்.
"அர‌சே இவ‌ள் தான்"என்று ஆர‌ம்பித்த‌ வீர‌னை த‌ன் கையை அசைத்து நிறுத்த‌ சொன்னான்.

அஞ்ச‌னை நிமிர்ந்து இவ‌ர்க‌ளை பார்த்தாள்.

பார்த்திப‌னை பார்த்து வாருங்க‌ள் என்று கூறிவிட்டு அவ‌ன் பின்னால் இருக்கும் வீர‌னை முறித்தாள்.

"உங்க‌ள் அர‌ச‌ன் மீண்டும் ஆள் அனுப்பி இருக்கிறாரா.நான் நேற்றே தெளிவாக‌ கூறினேன் அல்ல‌வா.இவ‌ர் என்ன‌ பேச‌ போகிறார்?"என்றாள் பார்த்திப‌னை பார்த்து.

"ஏய் பெண்ணே யாரிட‌ம் என்ன‌ கூறுகிறாய்"என்றான் வீர‌ன்.

பார்த்திப‌ன் அவ‌னை முறைத்தான்.அவ‌ன் அமைதி அடைந்தான்.

"நீங்க‌ள் நேற்று என்ன‌ கூறினீர்க‌ள் என்று என‌க்கு தெரியாது.ஏன் சிற்பி அர‌ண்ம‌னைக்கு வ‌ர‌ இய‌லாது"என்றான் பார்த்திப‌ன்.

"ஐயா உங்க‌ள் அர‌ச‌ருக்கு சிலை செய்து த‌ர‌ வேண்டும் என்றால் அவ‌ர் தான் இங்கே வ‌ர‌ வேண்டும்.த‌வ‌றாக‌ புரிந்து கொள்ள‌ வேண்டாம்.சிலை வ‌டிக்க‌ நிறைய‌ பொருள்க‌ள் தேவைப‌டும் அது அனைத்தையும் உங்க‌ள் அர‌ண்ம‌னைக்கு எடுத்து வ‌ர‌ இய‌லாது.ச‌ரியான‌ பொருள்க‌ளை கொண்டு சிலை வ‌டிக்க‌வில்லை என்றாள் அது ந‌ன்றாக‌ வ‌ராது.மேலும் என் குரு மிக‌வும் வ‌ய‌தான‌வ‌ர்.அவ‌ரால் அவ்வ‌ள‌வு தூர‌ம் வ‌ர‌ முடியாது"என்றால்

மாவீர‌ன் பார்த்திப‌ன்Où les histoires vivent. Découvrez maintenant