9.

898 89 16
                                    

ஒரு ம‌ணி நேர‌ ப‌யிற்சிக்கு பிற‌கு த‌ன் உடையை மாற்றிக் கொள்ள‌லாம் என்று த‌ன் அறைக்கு சென்றாள் சம்யுக்தை.
"அம்மையே காலை உண‌வை சாப்பிட்டுவிட்டு குதிறை ப‌யிற்சிக்கு த‌யார‌க‌ சொன்னார் ம‌ன்ன‌ர்"என்றான் ஒரு காவ‌ல‌ன்.
"இப்போது தானே ஒரு ப‌யிற்சியை முடித்தேன்.மீண்டும் ஒன்றா"என்று புல‌ம்பிக் கொண்டே உண‌வை உண்ண‌ சென்றாள் ச‌ம்யுக்தை.
ஒரு ம‌ணி நேர‌ம் குதிரை ப‌யிற்சி முடித்து விட்டு வ‌ந்தாள் ச‌ம்யுக்தை.மிக‌வும் சோர்வாக‌ இருந்தாள்.எத‌ற்காக‌ பெண்க‌ளுக்கு க‌த்தி ச‌ண்டை குடிரை ஓட்ட‌ ப‌யிற்சி எல்லாம்.என் நாட்டில் நான் சுக‌மாக‌ தோழிக‌ளுட‌ன் சிரித்து பேசி விளையாடிக் கொண்டு இருப்பேன்.ஏன் இப்ப‌டி என்னை கொடுமை ப‌டுத்துகிறான்"என்று த‌ன் நிலைமையை எண்ணி நொந்து கொண்டாள்.
த‌ன் அறிக்கு சென்று த‌ன் பெட்டியை திற‌ந்தாள்.திடுக்கிட்டாள்.அவ‌ள்
ஆடைக‌ள் எதுவும் உள்ளே இல்லை.ப‌க்க‌த்தில் வேறு ஒரு பெட்டி இருப்ப‌தை பார்த்தாள்.திற‌ந்தாள்.அழ‌கான‌ வ‌ண்ண‌ மிகு ஆடைக‌ள் இருந்த‌ன‌.
ப‌ணி ஆள் ஒருவ‌னை அழைத்தாள்.
"என் ஆடைக‌ள் எல்லாம் எங்கே?"என்றாள் கோவ‌மாக‌.
"அந்த‌ பெட்டிக்குள் இருக்கிற‌து அம்மையே"என்றான் அவ‌ன்.
"அது என்னுடைய‌து இல்லை.என் வெள்ளை நிற‌ ஆடைக‌ள் எங்கே"என்றாள்.
"என‌க்கு தெரியாது.ம‌ன்ன‌ர் க‌ட்ட‌ளை"என்றான் அவ‌ன்.
"எதை கேட்டாலும் தெரியாது தெரியாது.ம‌ன்ன‌ரின் க‌ட்ட‌ளை என்கிறீர்க‌ள்.நான் வித‌வை என்று உங்க‌ளுக்கு தெரியாத‌.என‌க்கு வ‌ண்ண‌ ஆடைக‌ள் கொடுக்க‌ உன் ம‌ன்ன‌ன் யார்"என்று கத்தினாள்.
"என்ன‌ இங்கே ச‌த்த‌ம்"என்று ஒரு க‌னீர் குர‌ல் கேட்க‌வே ச‌ம்யுக்தை திரும்பி பார்த்தாள்.ப‌ணி ஆள் ந‌டுக்கிக் கொண்டு இருந்தான்.
"நீ போ"என்றான் பார்த்திப‌ன் ப‌ணி ஆள்ளிட‌ம்.
ச‌ம்யுக்தை பார்த்திப‌னை பார்த்த‌தும் அதிர்ச்சி அடைந்தாள்.
அவ‌ன் க‌ம்பீர‌மான‌ தோற்ற‌மும் இடியை போன்ற‌ குர‌லும் பார்ப‌வ‌ர்க‌ளை ப‌ய‌த்தில் உறைய‌ வைக்கும்.ஆனால் அவ‌ன் முக‌மும் ம‌ன‌தும் குழ‌ந்தை போல‌ மென்மையான‌து.அவ‌ன் சிரிப்பு தெய்வீக‌மான‌து.
த‌ற்போது அவ‌ன் ச‌ம்யுக்தையை முறைத்துக் கொண்டு இருந்தான்.ச‌ம்யுக்தை ப‌யத்தில் ஒரு ஓர‌மாக‌ நின்று கொண்டு இருந்தாள்.
"எத‌ற்காக‌ இப்ப‌டி க‌த்திக் கொண்டு இருக்கிறாய்.என்ன‌ வேண்டும் உன‌க்கு"என்றான்.
"உன் உயிர் என்று சொல்ல‌ வேண்டும் போல‌ இருந்த‌து அவ‌ளுக்கு.என் ஆடைக‌ளை காண‌வில்லை"என்றாள் அமைதியாக‌.
"ந‌ன்கு தேடி பார்த்தாயா.இந்த‌ பெட்டியில் பார்த்தாயா"என்றான் பார்த்திப‌ன்.
"நான் என் வெள்ளை நிற‌ ஆடைக‌ளை காண‌வில்லை என்று கூறினேன்.வ‌ண்ண‌ ஆடைக‌ள் என‌க்கு தேவை இல்லை"என்றாள்.
"ஏன் வ‌ண்ண‌ ஆடைக‌ள் அணிய‌ ம‌றுக்கிறாய்"என்றான் அவ‌ளையே பார்த்துக் கொண்டு.
அவ‌ன் பார்வை அவ‌ளை ஏதோ செய்த‌து.
"அர‌ச‌ரே உங்க‌ளுக்கு தெரியாத‌து ஒன்றும் இல்லை.ந‌ம் க‌லாசார‌த்தில் க‌ண‌வ‌ரை இழ‌ந்த‌ பெண் வ‌ண்ண‌ ஆடைக‌ள் உடுத்த‌ கூடாது"என்றாள் அமைதியாக‌.
"நீ பிற‌க்கும் போது க‌ண‌வ‌னோடு தான் பிற‌ந்தாயா."என்றான்.
"எந்த‌ பெண்ணும் அப்ப‌டி பிற‌ப்ப‌து இல்லை"என்றாள் எரிச்ச‌லாக‌.
"சிறு வ‌ய‌தில் இருந்தே பெண்க‌ள் பூ வைக்கிறார்க‌ள் பொட்டு வைக்கிறார்க‌ள் வ‌ண்ண‌ ஆடைக‌ள் உடுத்துகிறார்க‌ள்.பாதியில் வ‌ரும் க‌ண‌வ‌னால் வ‌ந்த‌து தாலி ம‌ட்டும் தானே.க‌ண‌வ‌னை இழ‌ந்த‌வ‌ள் த‌ன் தாலியை க‌ழ‌ற்றினாள் போதுமே.த‌ன் பெற்றோறாள் அல‌ங்க‌ரித்து அழ‌கு பார்த்த‌ பூ பொட்டு புட‌வை வ‌லைய‌ல் ம‌ற்ற‌ அணிக‌ல‌ன்க‌ளை எல்லாம் அத‌ற்காக துறக்க‌ வேண்டும்?"என்றான்.

மாவீர‌ன் பார்த்திப‌ன்Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin