44.

1.4K 91 27
                                    

வாளை த‌ன் இடுப்பில் இருந்து எடுத்தான்.த‌ன் க‌ண்க‌ளை மூடிக் கொண்டான்.
"ம‌ன்னித்துவிடு அஞ்ச‌னை உன‌க்கு செய்து கொடுத்த‌ ச‌த்திய‌த்தை என்னால் காபாற்ற‌ முடிய‌வில்லை.ஆனால் என் சார்பில் ச‌ம்யுக்தை செய்வாள்.அத‌ற்கு நான் உயிர் தியாக‌ம் செய்ய‌ வேண்டும்"என்றான்.

சிவ‌ பெருமானே என் உயிரை எடுத்துக் கொண்டு அவ‌ள் உயிரை திருப்பி த‌ர வேண்டுகிறேன்.இது நானுன் மேல் வைத்து இருக்கும் ப‌ற்றின் மீது ஆனை என்றான்.

த‌ன் வாளை எடுத்து த‌ன் க‌ழுத்தை வெட்டினான்.இர‌த்த‌ம் ப‌டிந்த‌ த‌ன‌து கையை சிவ‌ பெருமானின் உச்சியில் வைத்து இரத்த‌ அபிஷேக‌ம் செய்தான்.இர‌த்த‌ம் சிலையின் த‌லையில் இருந்து வ‌ழிய‌ வ‌ழிய‌ வெற்றிவீர‌னின் உயிர் அவ‌னை விட்டு பிரிந்து கொண்டு இருந்த‌து.வெற்றிவீர‌ன் மெதுவாக‌ ச‌ரிந்து கீழே விழுந்தான்.

விஷ‌ம் இற‌ங்குகிறது என்றார் ம‌ருத்துவ‌ர்.சோர்வாக‌ இருந்த‌ பார்த்திப‌ன் நிமிர்ந்து சம்யுக்தையை பார்த்தான்.விஷ‌ம் இற‌ங்கிக் கொண்டு இருந்த‌து.
வைத்திய‌ர் விய‌ந்து போனார்.இது எப்ப‌டி சாத்திய‌ம் என்று குழ‌ம்பினார்.
விஷ‌ம் முழுமையாக‌ இற‌ங்கிய‌து.ச‌ம்யுக்தை மெல்ல‌ க‌ண் விழித்தாள்.
அவ‌ள் க‌ண்க‌ள் பார்த்திப‌னை ச‌ந்தித்த‌து.அவ‌ன் அவ‌ள் கைக‌ளை ப‌ற்றினான்.அவ‌ள் புரியாம‌ல் முழித்தாள்.

"உன் காத‌லை உன் ம‌ர‌ண‌ த‌ருவாயில் உண‌ர்ந்தேன்.இனி உன்னை விட்டு எப்போதும் பிரிய‌ மாட்டேன்"என்றான்.

ச‌ம்யுக்தை அழ‌ துவ‌ங்கினாள்.மிக‌ சோர்வாக‌ இருந்த‌தால் அவ‌ளால் அழ‌ கூட முடிய‌வில்லை.

அவ‌ள் க‌ண்க‌ள் வெற்றிவீர‌னை தேடின‌.
"வெற்றிவீர‌ன் அண்ணா எங்கே"என்றாள்.

பார்த்திப‌ன் சுற்றும் முற்றும் பார்த்தான் பின் ஒரு ப‌ணி ஆளை அனுப்பினான்.
சிறிது நேர‌த்தில் ப‌ணி ஆள் த‌லை தெறிக்க‌ ஓடி வ‌ந்தான்.

"ம‌ன்னா த‌ள‌ப‌தியார் பூசை அறையில் இர‌த்த‌ வெள்ள‌த்தில் இற‌ந்து கிட‌க்கிறார்"என்றான்.

மாவீர‌ன் பார்த்திப‌ன்Onde histórias criam vida. Descubra agora