32.

807 78 12
                                    

ச‌ம்யுக்தை முக‌த்தில் வெளிச்சம் ப‌ட‌ அவ‌ள் மெதுவாக‌ க‌ண்ணை திற‌ந்தாள்.

ப‌டுக்கையில் பார்த்திப‌ன் இல்லை.எங்கே போனான் என்ற‌ யோச‌னையில் எழுந்தாள்.சுற்றும் முற்றும் பார்த்தாள்.அவ‌ன் திடீர் என்று க‌த‌வை த‌ள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தான்.ப‌யிற்சி உடையில் இருந்தான்.

"அர‌சே எங்கே கிள‌ம்பி விட்டிர்க‌ள்.உங்க‌ளுக்கு இன்னும் உட‌ம்பு ச‌ரியாக‌வில்லை"என்றாள்.

அவ‌ன் ப‌தில் பேசாம‌ல் வாளை எடுத்துக் கொண்டு இருந்தான்.
"உங்க‌ளிட‌ன் ம‌ன்னிப்பு கேட்க‌ தான் நான் காத்துக் கொண்டு இருந்தேன்"என்றாள்.

அவ‌ன் அவ‌ளை திரும்பிக் கூட‌ பார்க்க‌வில்லை.

"உங்க‌ளை ப‌ற்றி தெரியாம‌ல் நான் கொல்ல‌ முய‌ற்சி செய்த‌து த‌வ‌று"என்றாள்.

அவ‌ன் ச‌ற்று என்று அவ‌ள் மீது ஒரு பார்வை வீசினான்.
அவ‌ள் ம‌ன‌ம் துள்ளி குதித்த‌து.அவ‌ன் என்ன‌ சொல்ல‌ போகிறான் என்று ஆவ‌லாக‌ காத்துக் கொண்டு இருந்தாள்.

"ப‌யிற்சிக்கு நேர‌ம் ஆகிற‌து.சீக்கிர‌ம் கிள‌ம்புங்க‌ள்"என்று கூறிவிட்டு வெளியே சென்றான்.

ச‌ம்யுக்தையின் ம‌ன‌ம் ஏமாற்ற‌ம் அடைந்த‌து.

ச‌ம்யுக்தை வேக‌மாக‌ கிள‌ம்பி ப‌யிற்சிக்கு சென்றாள்.த‌ன‌து வாள் ப‌யிற்சியை மேற் கொண்டாள்.
அறை ம‌ணி நேர‌ ப‌யிற்சிக்கு பிற‌கு ஒரு ப‌த்து நிமிட‌ இடைவேளி விட‌ப்ப‌ட்ட‌து.அவ‌ள் ம‌ண‌லில் அம்ர்ந்து த‌ண்ணீர் ப‌ருகிக் கொண்டு இருந்தாள்.
பார்த்திப‌ன் எங்கே உள்ளான் என்று அவ‌ள் க‌ண்க‌ள் அலை பாய்ந்த‌ன‌.க‌த்தி ச‌ண்டை ப‌யிற்சி ந‌டக்கும் இட‌த்தில் ஆண்க‌ளுக்கு ப‌யிற்சி அளித்துக் கொண்டு இருந்தான்.அவ‌ர்க‌ளோடு பேசி சிரித்துக் கொண்டு இருந்தான்.
அவ‌ன் சிரிப்பில் ச‌ம்யுக்தை த‌ன்னையே ம‌ற‌ந்தாள்.இந்த‌ சிரிப்பு நிலைக்க‌ வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள்.
கையில் இருந்த‌ குவ‌லையில் இருந்து த‌ண்ணீர் சிந்தி அவ‌ள் ஆடையை ந‌னைத்த‌து.
"என்ன‌? ராணி அவ‌ர்க‌ளின் நினைவு ப‌யிற்சியில் இல்லை போலும்"என்ற‌ ச‌த்த‌ம் கேட்டு நீமிர்ந்தாள்.வெற்றிவீர‌ன் இவ‌ளை பார்த்து எள்ளி ந‌கையாடிக் கொண்டு இருந்தான்.

மாவீர‌ன் பார்த்திப‌ன்Donde viven las historias. Descúbrelo ahora