24.

759 84 6
                                    

ம‌றுநாள் காலை வெற்றிவீர‌ன் ஒரு வேலையாக‌ ப‌க்க‌த்து ஊருக்கு சென்றான்.த‌ன‌து வீர‌ர்க‌ளை சந்தித்து எப்போது வேண்டும் என்றாலும் போர் துவ‌ங்க‌லாம்.அத‌னால் த‌யாராக‌ இருக்க‌ வேண்டும் என்று எச்ச‌ரித்துவிட்டு சென்றான்.

அவ‌ன் சென்று ச‌ரியாக‌ ஒரு ம‌ணி நேர‌த்தில் வ‌ட‌நாட்டு ம‌ன்ன‌ன் ராஜ் தில‌க் ம‌கேந்திர‌ பூப‌தியின் கோட்டை மீது ர‌க‌சிய‌ தாக்குத‌ல் ந‌ட‌த்தினான்.
அவ‌ன் வீர‌ர்க‌ள் மிக‌ வேக‌மாக‌ வெற்றிவீர‌னின் வீர‌ர்க‌ளை வீழ்த்திவிட்டு முன்னேரினார்க‌ள்.
ம‌கேந்திர‌ பூப‌தி ச‌ற்று அதிர்ந்து போனார்.நேர்மையான‌ போரை எதிர்பார்த்து இருந்து 60 வ‌ய‌து அர‌ச‌ருக்கு ராஜ் தில‌க்கின் திடீர் தாக்குத‌ல் அதிர்ச்சியை த‌ந்த‌து.வீர‌ர்க‌ள் கோட்டைக்குள் புகுந்த‌ன‌ர்.கோட்டையில் பாதுகாப்புக்காக‌ இருந்த‌ வீர‌ர்க‌ளோடு வாள் ச‌ண்டை இட்ட‌ன‌ர்.

ஒரு வீர‌ன் மூல‌ம் த‌க‌வ‌ல் அறிந்த‌ வெற்றிவீர‌ன் கோட்டைக்கு விரைந்தான்.

ராஜ் தில‌க் ம‌கேந்திர‌ பூப‌தியின் அறைகுள் நுழைந்தான்.
"வ‌ண‌க்க‌ம் அர‌ச‌ரே"என்றான் வ‌ட‌மொழியில்.அதை த‌மிழில் மொழி பெய‌ர்ந்தான் அவ‌ன் காவ‌லாளி.
"நீ செய்யும் க‌ரிய‌ம் த‌ர்ம‌த்துக்கு எதிர‌ன‌து ராஜ் தில‌க்.எத‌ற்காக‌ இங்கே வ‌ந்தாய்?"என்றார் அர‌ச‌ர்.
அவ‌ன் காவ‌லாளி மொழி பெய‌ர்க்க‌ ராஜ் தில‌க் சிரித்தான்.

"த‌ர்ம‌ம் எல்லாம் ம‌னித‌ர்க‌ளுக்கு தான் அர‌சே.நான் தெய்வீக‌மான‌வ‌ன்"என்றான் ராஜ் தில‌க்.

"கோட்டையில் வேறு யார் இருக்கிறார்க‌ள் என்று பார்த்து இங்கே அழைத்து வா" என்றான் ராஜ் தில‌க் அவ‌ன் காவ‌லாளியிட‌ம்.
குடிலுக்கு கில‌ம்பிக் கொண்டு இருந்த‌ அஞ்ச‌னையை இழுத்து வ‌ந்தான் காவ‌லாளி.

அஞ்ச‌னையை பார்த்த‌ ராஜ் தில‌க் அவ‌ளை மேல் இருந்து கீழ் ஒரு முறை பார்த்தான்.

"ஆஹா என்ன‌ ஒரு அழ‌கி இவ‌ள்"என்று கூறி அஞ்ச‌னையின் க‌ன்ன‌த்தை தீண்டினான் ராஜ் தில‌க்.
அவ‌ள் அவ‌ன் ஸ்ப‌ரிச‌த்தில் புழுவாக‌ துடித்தாள்.

மாவீர‌ன் பார்த்திப‌ன்Tempat cerita menjadi hidup. Temukan sekarang