19.

731 83 6
                                    

வெற்றிவீர‌ன் ப‌த‌றி போனான்.
"பார்த்திபா உன‌க்கு என்ன‌ ஆயிற்று"என்று அவ‌னை உலுக்கினான்.
பார்த்திப‌ன் எழ‌வில்லை.
உட‌னே அர‌ண்ம‌னைக்கு அவ‌னை தூக்கிச் சென்றான்.
பார்த்திப‌னை க‌ண்ட‌தும் ப‌ணி ஆட்க‌ள் எல்லாம் ப‌த‌றி பொயின‌.

"ம‌ன்ன‌ருக்கு என்ன‌ ஆயிற்று த‌ள‌ப‌தியாரே"என்றாள் ஒரு ப‌ணி பெண்.

"தெரிய‌வில்லை ம‌ருத்துவ‌ரை வ‌ர‌ சொல்"என்றான்.

பார்த்திப‌னை ப‌டுக்கையில் ப‌டுக்க‌ வைத்து அவ‌ன் கையை பிடித்துக் கொண்டு க‌ண் க‌ல‌ங்கினான் வெற்றிவீர‌ன்.

"பார்த்திபா என‌க்கு இருக்கும் ஒரே சொந்த‌ம் நீ தான்.என்னை விட்டு போய் விடாதே"என்று கூறினான்.
ம‌ருத்துவ‌ர் வ‌ந்து பார்த்திப‌னை பார்வையிட்டார்.

"ஒன்றும் இல்லை.ம‌ன‌ அழுத்த‌த்தால் வ‌ந்த‌ ம‌ய‌க்க‌ம் தான்.ஏதோ ஒன்று அவர் ம‌ன‌தை மிக‌வும் பாதித்து இருக்கிற‌து.அவ‌ருக்கு இப்போது ஓய்வு தேவை.அவ‌ரை உண‌ர்ச்சி வாப்ப‌டுதும் விஷ்யம் எதுவாக‌ இருந்தாலும் இப்போது சொல்ல‌ வேண்டாம்.க‌வ‌ன‌மாக‌ பார்த்துக் கொள்ளுங்க‌ள்"என்றார்.

வெற்றிவீர‌ன் நிம்ம‌தி பெரு மூச்சு விட்டான்.
ஒரு ப‌ணி பெண்ணை அழைத்தான்.
"ச‌ம்யுக்தை எங்கே?"என்றான்.

"அவ‌ர் ப‌யிற்சிக்கு சென்று இருப்பார் த‌ள‌ப‌டியே"என்றாள்.

ச‌ரி என்று கூறிவிட்டு மைதான‌த்துக்கு விரைந்து சென்றான்.

ஒரு சில‌ ப‌ற‌வைக‌ளின் ச‌த்த‌த்தை த‌விற‌ காடு நிச‌ப்த‌மாக‌ இருந்த‌து.அவ‌ள் கால‌டியில் ந‌சுங்கும் ச‌ருகுக‌ளில் ச‌த்த‌ம் கேட்ட‌து.காற்று அடிக்கும் போது ச‌ருக‌ளின் ஒன்றோடு ஒன்று உர‌சும் ஓசை கேட்டு ச‌ம்யுக்தையின் உட‌ல் ந‌டுங்கிய‌து.

உள்ளே செல்ல‌ செல்ல‌ வெளிச்ச‌ம் க‌ம்மி ஆன‌து.அத‌ர்ந்து ப‌ர‌ந்து விரிந்து நிற்கும் ம‌ர‌ங்க‌ளின் இலைக‌ள் சூரிய‌னை ம‌றைத்த‌ன‌.

வெகு நேர‌ம் ந‌ட‌ந்த‌தால் கால் வ‌லிக்க‌ ஆர‌ம்பித்த‌து.ச‌ம்யுக்தை ஓய்வு எடுக்க‌ ஒரு பாறையின் மேல் அம‌ர்ந்தாள்.
சுற்றும் முற்றும் பார்த்தாள்.ஏதோ ச‌ர‌ ச‌ர‌வென‌ ச‌த்த‌ம் கேட்ட‌து.திரும்பி பார்த்தாள்.ஒரு ம‌ர‌ கிளையில் இருந்து சருக‌ளின் மேல் ஊர்ந்து ஒரு பாம்பு இவ‌ளை நோக்கி வ‌ந்த‌து.ச‌ம்யுக்தை ப‌ய‌த்தில் எழுந்து நின்றாள்.ச‌ர‌ ச‌ர‌ வென‌ அது ஊர்ந்து வேக‌மாக‌ வ‌ந்து கொண்டு இருந்த‌து.அவ‌ள் ம‌ன‌ம் ப‌ட‌ ப‌ட‌த்த‌து.த‌ன‌து வாளை த‌ற்காப்புக்காக‌ எடுத்து வ‌ந்த‌து நினைவுக்கு வ‌ர‌ ச‌ற்றென்று வாளை எடுத்து த‌ன் கால் அருகில் வ‌ந்த‌ பாம்பின் த‌லையை வெட்டினாள்.அத‌ன் தலை ப‌ற‌ந்து சென்று கீழே விழுந்த‌து.ச‌ம்யுக்தை நிம்ம‌தி பெருமூச்சு விட்டாள்.

மீண்டும் ந‌ட‌க்க‌ ஆர‌ம்பித்தாள்.திடீர் என்று தூர‌த்தில் ஒரு வெளிச்ச‌ம் தெரிந்த‌து.ச‌ல‌ ச‌ல‌வென‌ நீரின் ஓசை கேட்ட‌து.ச‌ம்யுக்தை வேக‌மாக‌ ந‌ட‌ந்து அங்கு சென்றாள்.என்ன‌ ஒரு ஆச்ச‌ரிய‌ம்.அங்கே காட்டின் ந‌டுவில் ஒரு அழ‌கிய‌ குள‌ம் இருந்த‌து.மேலே பார்த்தாள் ம‌ர‌ங்கள் எதுவும் ம‌றைக்காம‌ல் அந்த‌ குள‌த்தின் மேல் சூரிய‌ ஒளி நேர‌டியாக‌ ப‌ட்ட‌து.இய‌ற்கையின் இந்த‌ அதிச‌ய‌த்தை பார்த்து ச‌ம்யுக்தை அதிர்ந்து போனாள்.அத‌ன் அருகில் சென்று பார்த்தாள்.தெளிந்த‌ நீர் அட‌ங்கிய‌ ஒடு வ‌ட்ட‌ குள‌ம் இருந்து.
ஒரு வேளை இந்த‌ குள‌த்தை யாரும் க‌ண்டு பிடிக்க‌ கூடாது என்ப‌த‌ற்காக‌ தான் அனும‌தி ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌தா இல்லை இதில் குளித்தால் எதாவது ஆப‌த்து வ‌ருமா என்று யோசித்தாள்.எதுவாக‌ இருந்தாலும் அத‌ன் அழ‌கை ர‌சித்தே ஆக‌ வேண்டும் என்று அத‌ன் அருகில் அம‌ர்ந்தாள்.அவ‌ள் பின்ப‌த்தை அந்த‌ தெளிந்த‌ நீரில் க‌ண்டு ர‌சித்தாள்.

திடீரென ம‌ர‌ங்க‌ளின் பின்னால் இருந்து மூன்று குதிரைக‌ள் வெளிப்ப‌ட்ட‌ன‌.
ச‌ம்யுக்தை அதிர்ந்து போனாள்.
குதிரையில் இருந்த‌து செங்கல்வ‌ராய‌னும் அவ‌ன் வீர‌ர்க‌ள் இர‌ண்டு பேர்க‌ளும்.
வீர‌ர்க‌ளோடு சிரித்து பேசிக் கொண்டு வ‌ந்த‌வ‌ன் ச‌ம்யுக்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்தான்.
குதிரையை விட்டு இற‌ங்கினான்.
"இங்கே பாருங்க‌ள் தோழ‌ர்க‌ளே யார் நிக்கிறார்க‌ள் என்று"என்றான்.
அவ‌ள் வெறுப்பாக‌ அவ‌னை பார்த்தாள்.
"என்ன‌ இது துணி மூட்டை.உன்னை பார்த்திப‌ன் துர‌ட்டிவிட்டானா.போவ‌த‌ற்கு வேறு இட‌ம் இல்லாம‌ல் இந்த‌ காட்டில் த‌ஞ்ச‌ம் புகுந்தாயா?"என்றான்.

ச‌ம்யுக்தை எதுவும் சொல்லாம‌ல் அமைதியாக‌ இருந்தாள்.

செங்க‌ல்வ‌ராய‌ன் சிரித்தான்.
"ப‌த்தினியாக‌ வாழ்வ‌தில் ப‌ய‌னில்லை ச‌ம்யுக்தை.அவ‌ன் ம‌டியில் ப‌டுக்க‌ ம‌றுத்திருப்பாய் அவ‌ன் உன்னை வெளியே அனுப்பி இருப்பான்.எவ‌னும் ஆதாய‌ம் இல்லாம‌ல் உன்னை வைத்து கொள்ள‌ம‌ட்டான்.இந்த‌ காட்டில் இருந்து மிருக‌ங்க‌ளுக்கு இறை ஆக‌ போகிறாயா அல்ல‌து என்னுட‌ன் என் கோட்டைக்கு வ‌ர‌ போகிறாயா"என்றான்.

"உன்னுட‌ன் நான் வ‌ருவேன் என்று க‌ன‌விலும் நினைக்காதே"என்றால் ச‌ம்யுக்தை.

"உன்னை அவ்வ‌ள‌வு சீக்கிர‌ம் விட்டுவிடுவேன் என்று நினைத்தாயோ.வா என்னுட‌ன்"என்று கூறி அவ‌ள் கையை ப‌ற்றினான்.

மாவீர‌ன் பார்த்திப‌ன்Where stories live. Discover now