18.

765 86 12
                                    

பார்த்திப‌ன் வேக‌மாக‌ அர‌ண்ம‌னை விட்டு வெளியே சென்று வெற்றிவீர‌னின் க‌த‌வை த‌ட்டினான்.
வெற்றிவீர‌ன் தூக்க‌த்திலிருந்து விழித்து க‌த‌வை திற‌ந்தான்.

"பார்த்திபா என்ன‌ இந்த‌ நேர‌ம்.என்ன‌ ஆயிற்று"என்றான் ப‌த‌ட்ட‌மாக‌.
அவ‌னை த‌ள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தான் பார்த்திப‌ன்.
"தேவ‌ராய‌ன் போரில் ம‌டிந்தான் என்று நான் நினைத்துக் கொண்டு இருந்தேன்"என்றான்.

"ஆம் அது உண்மை தான்.நீ தானே அவ‌னை வீழ்த்தினாய்"என்றான் வெற்றிவீர‌ன்.

பார்த்திப‌ன் அவ‌னை கோவ‌மாய் பார்த்தான்.

"அது உண்மை இல்லை அவ‌னுக்கு யாரோ விஷ‌ம் கொடுத்து இருக்கிறார்க‌ள்"என்றான்.

வெற்றிவீர‌னின் முக‌ம் மாறிய‌து.
"ஓ அப்ப‌டியா.எதுவாக‌ இருந்தாலும் அவ‌ன் இப்போது உயிருட‌ன் இல்லை.அவ‌னை ப‌ற்றி நாம் ஏன் க‌வ‌லை ப‌ட‌ வேண்டும்"என்றான்.

"துரோகி"என்று கூறி அவ‌னை அறைந்தான் பார்த்திப‌ன்.

"என‌க்கு எப்ப‌டி ப‌ட்ட‌ அவ‌ பெய‌ரை உண்டாக்கிவிட்டாய்.எத‌ற்காக‌ அவ‌னுக்கு விஷ‌ம் வைத்தாய்.என் வீர‌த்தின் மீது உன‌க்கு ந‌ம்பிக்கை இல்லையா.கோழை என்ற‌ பெய‌ரை என‌க்கு பெற்று த‌ந்து விட்டாயே.இந்த‌ உண்மை தெரிவ‌த‌ற்கு முன்னாலேயே ச‌ம்யுக்தை கையால் நான் குத்துப‌ட்டு இற‌ந்து போய் இருக்க‌லாம்"என்றான் பார்த்திப‌ன்.

"என்ன‌ ச‌ம்யுக்தை உன்னை கொல்ல‌ வ‌ந்தாலா.அவ‌ளை உட‌னே சிறையில் அடைக்க‌ வேண்டும்.என்ன‌ தைரிய‌ம் அவ‌ளுக்கு"என்றான் வெற்றிவீர‌ன்.

"முத‌லில் உன்னை தான் நான் சிறையில் அடைக்க‌ வேண்டும்.ஒருவ‌னை போருக்கு முன் விஷ‌ம் வைத்து கொல்வ‌து ஒரு ந‌ல்ல‌ ம‌ன்ன‌னுக்கு அழ‌கு இல்லை.இது ப‌ச்சை துரோக‌ம்"என்றான் பார்த்திப‌ன்.

வெற்றிவீர‌ன் அமைதியாக‌ நின்றான்.

"சொல் எத‌ற்காக‌ இப்ப‌டி ஒரு க‌ரிய‌த்தை என்னிட‌ம் சொல்லாம‌ல் செய்தாய்"என்றான் பார்த்திப‌ன்.

மாவீர‌ன் பார்த்திப‌ன்Where stories live. Discover now