30.

737 83 15
                                    

"என்ன‌ தேவ‌ராய‌ன் அவ‌ர்க‌ளே உங்க‌ள் ம‌னைவி எங்கே?"என்றாள் அஞ்ச‌னை.
"இங்கே தான் இருந்தாள்.மேலே சென்று பாருங்க‌ள் ஏதாவ‌து ஒரு அறையில் இருப்பாள்"என்றான்.

"ச‌ரி"என்று கூறிவிட்டு மெலே சென்றாள்.
மேலே ந‌ங்கு தேடிவிட்டு கீழே வ‌ந்து பார்த்தாள்.
தேவ‌ராய‌ன் கீழே அம‌ர்ந்து குடித்துக் கொண்டு இருந்தான்.
அதை க‌ண்ட‌ அஞ்ச‌னை ச‌ற்று முக‌ம் சுழித்தாள்.
"உங்க‌ள் ம‌னைவி மேலே இல்லையே"என்றாள் த‌ய‌க்க‌மாக‌.

"அவ‌ள் எப்ப‌டி இருப்பாள்.அவ‌ள் இங்கே வ‌ர‌வில்லையே"என்று உள‌றினான்.

அஞ்ச‌னை திடுக்கிட்டாள்.

"பிற‌கு எத‌ற்காக‌ என்னை அழைத்து வ‌ந்தீர்க‌ள்"என்றாள் ஒரு வித‌ ப‌ய‌த்துட‌ன்.
தேவ‌ராய‌ன் சத்த‌மாக‌ சிரித்தான்.

"பேதை பெண்ணே இன்னுமா உன‌க்கு புரிய‌வில்லை.உன் க‌ண‌வ‌ன் என்னை ம‌க்க‌ள் முன்னிலையில் அவ‌ம‌ன‌ப‌துத்தினான்.நான் ப‌திலுக்கு அவ‌னுக்கு எதாவ‌து செய்ய‌ வேண்டாமா.த‌க்க‌ ச‌ம‌ய‌த்தில் நீ வ‌ந்து சிக்கிக் கொண்டாய்.உன் அழ‌கில் ம‌ய‌ங்கி விட்டேன்.வா என் அருகில்"என்று கூறி த‌ள்ளாடி அவ‌ள் அருகில் சென்றான்.

"நான் யார் என்று நினைத்தாய்.பார்த்திப‌னின் ம‌னைவி.என்னை தொட்டாள் நீ உயிருட‌னே இருக்க‌ மாட்டாய்"என்றாள் அவ‌ள்.
பார்த்திப‌னின் பெய‌ரை கேட்ட‌தும் தேவ‌ராய‌ன் கோவ‌ம் அடைந்தான்.
"அத‌ற்கு முன் அவ‌ன் த‌லையை நான் கொய்து விடுவேன்"என்றான்.

அவ‌ன் பிடியில் இருந்து த‌ப்பிக்க‌ முய‌ன்றாள் ஆனால் அவ‌ன் அவ‌ளை ஒரு அறைக்குள் இழுத்து சென்றான்.

அஞ்ச‌னை காட்டுக்குள் செல்வ‌தை க‌ண்ட‌ தோழி ஒருத்தி வெற்றிவீர‌னுக்கு த‌க‌வ‌ல் அனுப்பினாள்.
வெற்றிவீர‌ன் உட‌ன‌டியாக‌ பார்த்திப‌னுக்கு த‌க‌வ‌ல் அனுப்பி விட்டு காட்டுக்குள் சென்றான்.

தேவ‌ராய‌ன் சிரித்துக் கொண்டே வெளியே வ‌ந்தான்.
"பார்த்திபா உன்னை இதை விட‌ சிற‌ந்த‌ வ‌ழியில் நான் ப‌ழி வாங்க‌வே முடியாது.அவ‌மான‌ம் தாங்காம‌ல் நீ உன் ம‌னைவியோடு த‌ற்கொலை செய்து கொள்ள‌ போகிறாய்"என்றான்.

மாவீர‌ன் பார்த்திப‌ன்Where stories live. Discover now