15.

830 83 13
                                    

வெற்றிவீர‌ன் கோவ‌மாக‌ அவ‌ன் வீட்டுக்குள் நுழைந்தான்.அர‌ண்ம‌னை அருகில் ஒரு சிறிய‌ வீட்டில் வ‌சித்தான் வெற்றிவீர‌ன்.பார்த்திப‌ன் த‌ன் அர‌ண்ம‌னையில் த‌ங்கும் ப‌டி அழைத்தாலும் அதை ம‌றுத்துவிட்டு இந்த‌ வீட்டில் வாழ்ந்தான்.

க‌த‌வை வேக‌மாக‌ திற‌ந்து விட்டு சுவ‌ற்றில் இருந்த‌ ப‌ட‌த்துக்கு அருகில் சென்றான்.

"பார்த்திப‌ன் இன்று அவ‌ளுக்காக‌ என்னை அடித்து விட்டான்.நீ இருந்து இருந்தால் இது நட‌ந்து இருக்குமா.பார்த்திப‌ன் மாறிவிட்டான்.அவ‌ன் உன்னை ம‌ற‌ந்துவிட்டான்.எத‌ற்காக‌ அவ‌ளை இங்கே அழைத்து வ‌ந்தோம் என்ற‌ கார‌ண‌த்தை ம‌ற‌ந்துவிட்டு செய‌ல்ப‌ட்டுக் கொண்டு இருக்கிறான்.நான் இனி இங்கே இருக்க‌ போவ‌து இல்லை"என்று கூறிவிட்டு த‌ன‌க்கு தேவையான‌ அனைத்தையும் ஒரு மூட்டையாக‌ க‌ட்டினான்.பின் அதை எடுத்துக் கொண்டு திரும்பினான்.

பார்த்திப‌ன் அவ‌ன் க‌த‌வு அருகே நின்று கொண்டு இருந்தான்.
"எங்கே புற‌ப்ப‌ட்டு விட்டாய் வெற்றிவீரா"என்றான்.

"என் நாட்டுக்கு"என்றான் வெற்றிவீர‌ன்.

"நீயும் என்னைவிட்டு போக‌ முடிவு செய்து விட்டாயா.நீ இல்லாம‌ல் ந‌ன் உயிர் வாழ்வேன் என்று நினைதாயா?"என்றான் பார்த்திப‌ன்.

"என் இட‌த்தை நிர‌ப்ப‌ ஒருத்தி வ‌ந்துவிட்டாள்"என்றான் வெற்றிவீர‌ன்.
"உன் இட‌த்தை இந்த‌ ஜென்ம‌த்தில் யாராலும் நிர‌ப்ப‌ முடியாது"என்றான் பார்த்திப‌ன்.

"என‌க்கு ந‌ம்பிக்கை இல்லை"என்றான் வெற்றிவிர‌ன்.

"ஏன் இல்லை"என்றான் பார்த்திப‌ன்.
"அவ‌ளை இங்கே அழைத்து வ‌ந்த‌ கார‌ண‌ம் என்ன‌ என்று ம‌றந்து விட்டாயா?"என்றான் வெற்றிவீர‌ன்.

"நீ செய்த‌ த‌வ‌றுக்கு நான் இவ‌ளை த‌ண்டித்தாள் நீ ஒத்துக் கொள்வாயா"என்றான் பார்த்திப‌ன் சுவ‌ரில் மாட்டி இருக்கும் ப‌ட‌த்தை காட்டி.
வெற்றிவிர‌ன் அமைதியாக‌ இருந்தான்.

மாவீர‌ன் பார்த்திப‌ன்Where stories live. Discover now