10.

826 81 7
                                    

த‌ன் அறைக்குள் நுழைய‌ முற்ப‌ட்ட‌ பார்த்திப‌ன் அல‌ற‌ல் ச‌த்த‌ம் கேட்டு அந்த‌ அறைக்குள் விரைந்தான்.ஏதோ எரிந்து கொண்டு இருப்ப‌து தெரிந்த‌து.விரைந்து சென்று அதை அனைத்தான்.ச‌ம்யுக்தை ப‌ய‌த்தில் அவ‌ன் ச‌ட்டையை இறுக்க‌ பிடித்துக் கொண்டாள்.அவ‌ன் மீண்டும் தீ ப‌ந்த‌த்தை ஏற்றினான்.அத‌ன் ஒலியில் அவ‌ள் முக‌த்தை பார்த்தான்.அச‌ந்து போனான்.பூவோடும் பொட்டோடும் மிக‌ அழ‌காக‌ இருந்தாள்.அவ‌ள் கையை பிடித்து அவ‌ள் எழுந்திரிக்க‌ உத‌வினான் ஆனால் அவ‌ளால் எழுந்திரிக்க‌ முடிய‌வில்லை.வேறு வ‌ழி இல்லாம‌ல் அவ‌ன் அவ‌ளை த‌ன் அறைக்கு தூக்கி சென்றான்.இன்னும் ப‌ய‌த்தில் இருக்கும் அவ‌ள் அவ‌ன் மார்பில் த‌ன் முக‌த்தை புதைத்துக் கொண்டாள்.
அவ‌ன் அறைக்குள் சென்று அவ‌ன் ப‌டுக்கையில் மெதுவாக‌ ப‌டுக்க‌ வைத்தான்.
இருவ‌ரும் சிறிது நேர‌ம் என்ன‌ பேசுவ‌து என்று தெரியாம‌ல் அமைதியாக‌ இருந்தார்க‌ள்.

"உன் காலில் அடி ப‌ட்டு இருக்கிற‌து என்று நினைக்கிறேன்.ஒரு ப‌ணி பெண்ணை உன் உத‌விக்கு அனுப்புகிறேன்"என்றான்.
க‌த‌வின் அருகில் சென்ற‌ அவ‌ன் மிண்டும் அவ‌ளை நோக்கி வ‌ந்தான்.

"நீ எத‌ற்காக‌ மேலே வ‌ந்தாய்"என்றான்.
அவ‌ள் என்ன‌ சொல்வ‌து என்று தெரியாம‌ல் முழிக்க‌.

"ச‌ரி அது முக்கிய‌ம் இல்லை.இந்த‌ அர‌ண்ம‌னைக்கென‌ சில‌ விதிமுறைக‌ள் உள்ள‌ன‌.அந்த‌ அறைக்குள் யாரும் செல்ல‌ அனும‌தி இல்லை.நான் இங்கே இல்லாத‌ நேர‌த்தில் அர‌ண்ம‌னையில் உலாவ‌ கூடாது.மீண்டும் இப்ப‌டி நீ செய்தால் க‌டுமையாக‌ த‌‌ண்டிக்க‌ப்ப‌டுவாய்"என்று கூறி விட்டு வேக‌மாக‌ வெளியே சென்றான்.

ம‌றுநாள் க‌லையில் ச‌ம்யுக்தை திடீர் என்று த‌ன‌து தூக்க‌த்திலிருந்து எழுந்தாள்.ம‌ணி ஆகிவிட்ட‌தே.ஏன் யாரும் என்னை எழுப்ப‌வில்லை என்று யோசித்தாள்.அறையில் இருந்து குளிக்கும் அறைக்குள் சென்றாள்.அங்கே இருந்த‌ ஒரு பெண்ணிட‌ம் ஏன் த‌ன்னை எழுப்ப‌வில்லை என்று வின‌வினாள்.

மாவீர‌ன் பார்த்திப‌ன்Where stories live. Discover now