35.

781 76 19
                                    

பார்த்திப‌ன் ஒரு நாள் வெற்றிவீர‌னை அர‌ச‌ ச‌பைக்கு அழைத்தான்.

"சொல்லுங்க‌ள் அர‌சே"என்றான் வெற்றிவீர‌ன்.

"நான் இர‌ண்டு நாட்க‌ள் மாறுவேட‌த்தில் ந‌ம‌து நாட்டை சுற்றி வ‌ர‌ போகிறேன்"என்றான் பார்த்திப‌ன்.

"என்ன‌ திடிர் என்று இந்த‌ ப‌ய‌ண‌ம்"என்றான் வெற்றிவீர‌ன்.

"என்ன‌ ம‌ற‌ந்துவிட்டாயா நாம் மூன்று மாத‌த்துக்கு ஒரு முறை செல்வ‌து வ‌ழ‌க்க‌ம் தானே"என்றான்.

"ஓ மூன்று மாத‌ங்க‌ள் ஓடி விட்ட‌தா அத‌ற்குள்.சரி எப்போது கிள‌ம்புகிறோம்"என்றான் வெற்றிவீரா.

"நீ வ‌ர‌ வேண்டாம் நீ இங்கே இருந்து வேலைக‌ளை பார்த்துக் கொண்டு இரு.இந்த‌ முறை நான் ம‌ட்டும் சென்று வ‌ருகிறேன்."என்றான் பார்த்திப‌ன்.

"நீ த‌னியாக‌ செல்ல‌ வேண்டாம் பார்த்திபா.நானும் வ‌ருகிறேன்"என்றான் வெற்றிவீர‌ன்.

"இல்லை இல்லை நீ வ‌ந்து விட்டால் ச‌ம்யுக்தைக்கு பாதுகாப்பு இருக்காது அத‌னால் நீ வ‌ர‌ வேண்டாம்"என்றான்.

"அடேங்க‌ப்பா என்ன‌ அவ‌ள் மேல் திடீர் க‌ரிச‌ன‌ம்.நேற்று அப்ப‌டி கோவ‌மாக‌ க‌த்தினாய்"என்றான் வெற்றிவீர‌ன்.

"இந்த‌ நாட்டுக்கு நான் அர‌சனா இல்லை நீ அர‌ச‌னா.நான் சொல்வ‌தை ம‌ட்டும் செய்"என்றான்.

"ச‌ரி அர‌சே"என்று கூறி அவ‌ன் முன் ப‌னிவாக‌ நின்றான்.

பார்த்திப‌ன் அவ‌னை முறைத்துவிட்டு அங்கு இருந்து சென்றான்.

வெற்றிவீர‌ன் அவ‌ன் செல்வ‌தை க‌ண்டு சிரித்தான்.
"உன் ம‌ன‌தில் புதைந்து இருக்க்ம் இருக்கும் காத‌லை வெளியில் கொண்டு வ‌ருவ‌து தான் என் அத்யாய‌ வேலை"என்று நினைத்துக் கொண்டான்.

அர‌ச‌ ச‌பையை விட்டு வெளியே வ‌ந்த‌ போது ச‌ம்யுக்தை நின்று கொண்டு இருப்ப‌தை பார்த்தான்.
அவ‌ள் மேல் கோவ‌ப்ப‌ட்டு க‌த்திய‌ பிற‌கு அவ‌ளிட‌ம் அவ‌ன் பேச‌வே இல்லை.
அவ‌ள் அவ‌னை ஒரு எதிர்பார்ப்போடு பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அவ‌ள் அருகில் வ‌ந்த‌ அவ‌ன் அவ‌ள் மேல் ஒரு முர‌ட்டு பார்வை வீசிவிட்டு எதுவும் பேசாம‌ல் சென்றான்.
ச‌ம்யுக்தை மிக‌வும் வ‌ருத்த‌ம் அடைந்தாள்.
அவ‌னிட‌ம் ம‌ன்னிப்பு கேட்க‌ வேண்டும் என்று நினைத்தால் ஆனால் அவ‌ன் மீண்டும் கோவ‌ப்ப‌டுவானோ என்று நினைத்து அவ‌ள் மௌன‌ம் சாதித்தாள்.
எங்கே இந்த‌ கோவ‌ம் வெறுப்பாக‌ மாறி விடுமோ என்று எண்ணி மிக‌வும் ப‌ய‌ந்தாள்.

மாவீர‌ன் பார்த்திப‌ன்Where stories live. Discover now