38.

673 73 14
                                    

"பார்த்திபா நான் எவ்வ‌ள‌வு சிர‌ம‌ப்ப‌ட்டு அந்த‌ மாப்பிள்ளையை கூட்டி வ‌ந்தேன் தெரியுமா?நீ ஏன் ம‌றுப்பு தெரிவிக்கிறாய்"என்றான் வெற்றிவீர‌ன் ஒரு பொய்யான‌ கோவ‌த்தோடு.

"என‌க்கு.அவ‌னை பிடிக்க‌வில்லை.அவ‌ன் ச‌ம்யுக்தைக்கு பொறுத்த‌மாக‌ இருக்க‌ மாட்டான்"என்றான்.

"சரி வேறு யார் அவ‌ளுக்கு ச‌ரியாக‌ இருப்பார்க‌ள் என்று நீ நினைக்கிறாய்"என்றான் வெற்றிவீர‌ன்.

"நான்...... அது வந்து....அப்ப‌டி யாரையும் நான் இன்னும் யோசிக்க‌வில்லை"என்று த‌டுமாறினான்.

"சரி ச‌ம்யுக்தைக்கு எப்ப‌டிப‌ட்ட‌ மாப்பிள்ளை வ‌ர‌ வேண்டும் என்று யோசித்து வை.நான் அப்ப‌டியே ஒருவ‌னை பார்க்கிறேன்"என்று கூறி சென்றான்.

பார்த்திப‌ன் குழ‌ப்ப‌மாக‌ க‌ண்ணாடியை பார்த்தான்.
"என்ன‌ ஆயிற்று என‌க்கு.யேன் அந்த‌ மாப்பிள்ளையை என்ம‌ன‌ம் ஏற்க‌ ம‌றுக்கிற‌து.ஒரு வேளை அந்த‌ மூதாட்டி கூறிய‌தை போல‌ நான் ச்ச‌ ச்ச‌ அப்ப‌டி எதுவும் இருக்காது.இவ‌ன் அவ‌ளுக்கு த‌குதி அற்ற‌வ்ன்.அத‌னால் தான் என் ம‌ன‌ம் ப‌த‌றுகிற‌து.அவ‌ளுக்கு ஒரு நல்ல‌ மாப்பிள்ளையை நானே பார்க்கிறேன்"என்றான்.

"அண்ணா எத‌ற்காக‌ இந்த‌ விளையாட்டு.இது என‌க்கு ச‌ரியாக‌ ப‌ட‌வில்லை.விளையாட்டு விப‌ரீத‌ம் ஆகிவிட‌ போகிறது"என்றாள் ச‌ம்யுக்தை.

"அவ‌ன் ம‌ன‌தில் இருக்கும் காத‌லை வெளி கொண்டு வ‌ர‌வே இந்த‌ விளையாட்டு.அவ‌னே த‌ன் வாயால் உன்னிடம் காத‌லை சொல்லுவான்.பொறுத்து இருந்து பார்"என்றான்.

ம‌றுநாள் காலை பார்த்திப‌ன் அமைச்ச‌ரை அழைத்து ஒரு சுயம்வ‌ரத்துக்கு ஏற்பாடு செய்ய‌ சொன்னான்.
அனைத்து நாட்டு அரச‌ர்களுக்கும் அழைப்பு விடுக்க‌ப்ப‌ட்டு இருந்த‌து.ச‌ம்யுக்தையின் புக‌ழ் பாடி அவ‌ளை திரும‌ண‌ம் செய்யும் அரச‌னுக்கு கொடுக்க‌ப்ப‌டும் ப‌ரிசு பொருள்க‌ளையும் அறிவித்தான்.

இத‌னால் ப‌ல‌ அர‌ச‌ர்க‌ள் அந்த‌ சுய‌ம்வரத்தில் க‌ல‌ந்து கொள்ள‌ ஆவ‌லாக‌ இருந்தார்க‌ள்.

மாவீர‌ன் பார்த்திப‌ன்Donde viven las historias. Descúbrelo ahora