13.

783 84 13
                                    

"என்னை கேட்காம‌ல் முடிவுக‌ள் எடுக்க‌ உன‌க்கு யார் அனும‌தி கொடுத்த‌து?"என்று க‌ர்ஜித்தான் பார்த்திப‌ன்.

வெற்றிவீர‌ன் ஒரு புற‌ம் சிரித்துக் கொண்டு இருந்தான்.

"நான் முடிவு எடுக்க‌வில்லை அர‌சே.இப்ப‌டி செய்ய‌லாம்.செய்தால் அனைவ‌ருக்கும் ந‌ன்மை.நான் ம‌ன்ன‌ரிட‌ம் பேசி அனும‌து வாங்குகிறேன் என்று தான் சொன்னேன்"என்றாள் ச‌ம்யுக்தை.

"நீ கூறுவ‌தை நான் ஒப்புக் கொள்வேன் என்று எப்ப‌டி ந‌ம்பிக்கை கொண்டாய்"என்றான் பார்த்திப‌ன்.

"நீங்க‌ள் எப்போதும் ம‌க்க‌ள் ந‌ல‌னுக்காக‌ சிந்திப்ப‌வ‌ர்.நியாய‌மான‌ விஷ‌ய‌ங்க‌ளை எப்போதும் ஆத‌ரிப்பீர்க‌ள் என்று நான் ந‌ம்புகிறேன்"என்றாள் ச‌ம்யுக்தை.

"ச‌ரி உன் எண்ண‌ம் என்ன‌ சொல்லு"என்றான் பார்த்திப‌ன்.
"ந‌ம‌து நாட்டில் நிரைய‌ வெற்று நில‌ங்க‌ள் உள்ள‌ன‌.அதில் விவ‌சாய‌ம் செய்தால் அது ந‌ம‌து நாட்டை வ‌ள‌மாக்கும்.அது ம‌ட்டும் இல்லாம‌ல் ப‌சி வ‌ற‌ட்சியால் இங்கே திருட‌ வ‌ரும் கிராம‌ ம‌க்க‌ளுக்கு ஒரு வேலை கிடைக்கும்.அவ‌ர்க‌ள் விளைவிக்கும் உண‌வு பொருள்க‌ளில் பாதியை ந‌ம‌க்கும் மீதியை ப‌சியால் வாடி இருக்கும் கிராம‌ ம‌க்க‌ளுக்கும் ப‌கிர்ந்து கொள்ள‌லாம்.இத‌னால் அவ‌ர்க‌ள் ப‌சியும் தீரும் ந‌ம‌து நாட்டில் வ‌ந்து இனி திருட‌ மாட்டார்க‌ள்"என்றாள்.

"அந்த‌ கிராம‌ம் என்க்கு கிழ் இல்லாத‌ போது நான் எப்ப‌டி உத‌வ‌ முடியும்.இது என‌க்கும் அவ‌ர்க‌ளின் ம‌ன்ன‌ன் க‌ருங்கால‌னுக்கும் ம‌ன‌ க‌ச‌ப்பை உண்டாக்கும்.அது அவ‌ன் தேச‌ம் அவ‌ன் தான் அதை செழுமையாக்க‌ பாடுப‌ட‌ வேண்டும்.இதில் நான் த‌லையிட‌ முடியாது"என்றான் பார்த்திப‌ன்.

"அந்த‌ ம‌ன்ன‌ன் இவ‌ர்க‌ள‌து கிராம‌த்தை ஒதுக்கி விட்டார் அர‌சே.இவ‌ர்க‌ள் இப்போது வாழ‌ வ‌ழி இல்லாம‌ல் இருக்கின்ற‌ன‌ர்.த‌ய‌வு கூர்ந்து சிந்தித்து பாருங்க‌ள்.சிறிய‌ கிராம‌ம் ஆனாலும் அதில் 20 கும் மேற்ப‌ட்ட‌ குடும்ப‌ங்க‌ள் உள்ள‌ன‌.அவ‌ர்க‌ள் ப‌சியால் வாட‌ நாம் கார‌ண‌மாக‌ இருக்க‌ வேண்டாம்"என்றாள்.

மாவீர‌ன் பார்த்திப‌ன்Where stories live. Discover now