பொன்மகள் வந்தாள்-1

205 16 15
                                    

"வந்தாள் மகா லட்சுமியே... என் வீட்டில்... என்றும் அவள் ஆட்சியே..."

தொலைக்காட்சியில் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது...அதை "ஆ.." வென்று பார்த்தபடி... டைனிங் டேபிளை துடைக்கிறேன் பேர்வழியென்று பாவனை செய்து கொண்டிருந்தாள் பாக்யா...

"இது தான் நீ வேலை செய்கிற லட்சணமா...?"

அவள் காதருகில் கடுமையான ஒலித்த குரலில் அரண்டு போனவளாக.. கை வேலையை நிறுத்திவிட்டு திரும்பி பார்த்தாள்...

கண்களில் தீப்பொறி பறக்க... அச்சு அசல் அந்த காளியின் மகா ரூபமாய் நின்று கொண்டிருந்தாள் இந்திரஜா.

"அ..அ.. அம்மா..."

வார்த்தைகளை தந்தியடித்தாள் பாக்யா..

"இப்பத்தான் அ ஆனா.. ஆவன்னா கத்துக்கரியா..? அதுக்கு ஏன் வீடுதான் கிடைச்சதா..?"

"இல்..இல்லைங்கம்மா.."

"வேலை நிலைக்கனுமா.. வேணாமா...?"

"வேணும்மா.. கட்டாயம் வேணும்மா."

"அந்த நினைப்பு இருக்குல..? அப்ப.. ஒழுங்காய் வேலை மட்டும் கவனி.."

அதட்டிவிட்டு நகர்ந்த இந்திரஜாயிடம்.. "போம்மா.. நீயாச்சு.. உன் வீட்டு வேலையுமாச்சு.." என்று சொல்ல பாக்யாவுக்கு ஒரு நொடி கூட ஆகாது..

அவளுக்கும் அப்படி சொல்ல வேண்டும் என்ற ஆசை வெகுநாளாக உண்டுதான்...

ஆனால்.. அந்த வீட்டில் கிடைக்கும் சம்பளத் தொகை அவளது வாயைக் கட்டிப் போட்டு வைத்திருந்தது.. மற்ற வீடுகளில் வேலை கிடைக்கும் சம்பளத்தை போல.. நான்கு மடங்கு அதிகமாக இந்த வீட்டில் கொடுக்கப்பட்டது.. அந்த காரணத்துக்காகவே.. அங்கே வேலை செய்தவர்கள்.. வாயைத் திறக்காமல் பசை போல வேலையில் ஒட்டிக் கொண்டிருந்தார்கள்..

அந்த வீட்டில் மட்டும்.. மற்ற வீடுகளைப் போல அதே அளவு சம்பளம் கிடைத்தால்.. ஒருவேலையாள் கூட.. ஒரு மணி நேரத்துக்கு மேல் அங்கே தாக்குப் பிடிக்க மாட்டார்கள்..

வந்தாள் மகாலட்சுமி (Completed)Where stories live. Discover now