பொன்மகள் வந்தாள் -14

80 13 0
                                    

   " நீ தாராளமாகப் படிக்கலாம்... ஐ ஹோவ் நோ அப்ஜெக்சன்.."

    அவன் தாராள மனதுடன் சொன்னபோது..

    'அதை ஆட்சேபிக்க அவன் யார்..' என்ற கேள்வி அவள் நெஞ்சில் எழுந்தது...

    "உனக்கு விருப்பப்பட்டதைச் சொல்.. நான் அதற்கு அனுமதி கொடுக்கிறேன்.."

     அவனது பெருந்தன்மையில் அவள் பல்லைக் கடித்தாள்..

     அவளுக்கு அனுமதி கொடுக்க அவன் யார்..? அவளுக்கு எஜமானனா..? அவள் என்ன அவனுக்கு அடிமையா..?

     "உன்னுடைய உரிமையை நான் பறிக்க மாட்டேன் அருவி.. உனக்கு சகலவிதமான உரிமைகளையும் கொடுப்பேன்.."

    அவன் மிதப்பாய் பேசியது விதத்தில் ஒலியருவி கொதித்துப் போனாள்.. அணை உடைந்து வெள்ளம் வெளியே பார்த்தது..

    "என்னோட உரிமையை நீங்க கொடுத்த வாங்கிக் வேண்டிய அவசியம் எனக்கில்லை.."

    "நோ.. நோ.. அருவி.. நான் சொல்ல வந்ததே வேறு.."

     "அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.. நீங்க முதலில் இதைக் கேளுங்க.. என் உரிமை.. எனக்கான உரிமை என்னிடம் தான் இருக்கிறது.. இனியும் இருக்கும்.. மத்தவங்களிடம் அதை யாசகம் கேட்கும் செயலை  ஒரு நாளும் நான் செய்ய மாட்டேன்.."

     அவள் பேசிய விதத்தில் அவன் முகம் மாறிப் போனான்.. அவனின் உயரம் என்ன.. ஒரு சிறு பெண் அவனிடம் இத்தனை ஆணவமாய் பேசுவதா..?

     "உன் மேல் நான் ஆசைப்பட்டு விட்ட ஒரே காரணத்துக்காக.. நீ பேசுவதை எல்லாம்.. நான் பொறுத்துப் போவேன்னு நினைக்காதே.."

    "உங்க மனசு புண்படும்படி நான் எதையும் பேசிவிடலை சார்.."

    "கால் மீ சஞ்சீவ்.."

    "அதை நானாய் சொல்லனும்.. நீங்க சொல்லி நான் அதைச் செய்ததா இருக்கக் கூடாது.."

    "இளவேந்தன் மகளை அருமையா வளர்த்து வெச்சிருக்கார்ன்னு சொல்லுவாங்க.. அப்படியில்லை போல இருக்கே.."

வந்தாள் மகாலட்சுமி (Completed)Where stories live. Discover now