பொன்மகள் வந்தாள்-2

139 15 16
                                    

"இந்த பொண்ணு இந்த வீட்ல தப்பி பொறுந்துருச்சு.."

இளவேந்தன் குடும்பத்தை அறிந்த அனைவரின் மனதிலும் ஓடும் எண்ணம் இது ஒன்றுதான் அப்பேற்பட்ட ஏகோபித்த பாராட்டைப் பெற்ற ஒலியருவி அந்தக் குடும்பத்தில் தப்பிப் பிறந்தவள்தான்...

அவளுக்கு கடுமையான பேசத் தெரியாது.. மற்றவர்களின் மனதை புண்படுத்தப் பிடிக்காது..

"இனிய உளவாக இன்னாத கூறல்- கனியிருப்ப
காய் கவர்ந் தற்று.."

இந்திரஜா உட்கார வைத்து.. வேலை மெனக்கெட்டு திருக்குறளை சொல்லி வைப்பாள்...

"அப்படின்னா..?" இந்திரஜாக்கு புரியாது..

"இனிமையான வார்த்தைகள் இருக்க.. கடுமையான வார்த்தைகளைப் பேசுவது.. பழமிருக்கு.. காயைப் பறிப்பதைப் போலன்னு வள்ளுவரே சொல்லியிருக்கார் மம்மி.."

"அதை எதுக்கு சொல்லி வெச்சாராம்..?"

"என்ன மம்மி இப்படி பேசறீங்க..?"

"வேற எப்படி பேசச் சொல்ற..? எல்லோரும் இனிமையாவே பேச ஆரம்பிச்சிட்டா.. கடுமையான வார்த்தைகளை யார் பேசறது..? அந்த வார்த்தைகளை ஒதுக்கிவெச்சா.. தமிழ் மொழிக்கு மனம் வலிக்காதா..?"

இப்படிப்பட்ட வியாக்கியானத்தைப் பேசு இந்திரஜாவின் மட்டுமே முடியும்..

"மம்மி...?" ஒலியருவியே திகைத்துப் போய் விடுவாள்..

"யாருகிட்ட..?" என்பதைப் போன்ற அலட்சியப் பார்வையை வீசியபடி இந்திரஜா அணுகும் முறை இவ்விதமாக இருந்தால்.. இளவேந்தன் அணுகுமுறையே வேறாக இருக்கும்..

"உங்களைப் பார்த்தாலே வொர்க்காஸ் நடுங்குறாங்க டாடி.."

"ஸோ வாட்.?"

"அவங்க கூட கேசுவலா பேசிப் பழகினா என்ன..?"

பெளர்ணமியின் நிலவை ரசிக்க ஆசைப்பட்ட மகளை அழைத்துக் கொண்டு கடற்கரைக்கு வந்திருந்த இளவேந்தன் அவளை உற்றுப் பார்த்து விட்டு.. நிலவை பார்த்தார்...

வந்தாள் மகாலட்சுமி (Completed)Dove le storie prendono vita. Scoprilo ora