பொன்மகள் வந்தாள் -8

98 14 1
                                    

"தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா
நீன்னை தீண்டும் இன்பம்
தோன்றுதடா.. நந்தலாலா.."

கண்மூடி மெல்லிய குரலில் பாடினாள் ஒலியருவி.. முடிய கண்களுக்குள்.. குழலூதும் கண்ணாக அந்த கணிகண்ணன் வந்து நின்று சிரித்தாள்...

'அவன் தீயா..? அவன் தீயானால் நான் நீராவேன்.. அவனது வேகத்தில் எனைக் கரைத்து.. அவனோடு போட்டி போட்டுக்கொண்டு ஓடுவேன்.. எது என்னை தடுப்பது..'

கட்டிலில் அருகே இருந்த டீப்பாயின் மீதிருந்த புகைப்படத்தில் இளவேந்தன்.. இந்திரஜாயும்.. ஒலியருவி நடுவில் வைத்துக் கொண்டு சிரித்தபடி இருந்தார்கள்..

புகைப்படத்தை கையிலெடுத்து பாத்தாள்...

கோடிஸ்வர இளவேந்தன் மடிப்பு கலையாத உடையுடன் இருக்க. இந்திரஜா வைரங்களில் மிளிர்ந்தாள்..

ஒலியருவிக்கு.. கணிகண்ணனின்.. யமஹா நினைவில் வந்தது...

புருவங்களை சுளிக்க.. ஏதோ சிந்தனைகள் மனதில் ஓட.. மெல்ல அவள் தூங்கி போனாள்..

"இன்னைக்கி என்ன ஸ்பெஷல்..?"

மறுநாள்.. மரத்தடியில் சந்தித்த போது கணிகண்ணன் கேட்டான்..

"நீங்களே பார்த்து சொல்லுங்க.."

ஒலியருவி டிபன் டப்பாவை அவனிடம் நீட்டினாள்...

"நான் திறந்து பார்த்தா அத்தனையும் காலியாகிவிடும் பரவாயில்லையா..?"

புருவங்களை உயர்த்தி அவன் சிரித்த சிரிப்பில் அவள் மனம் சிதறி தவித்தது..

அவன் ஆறடி உயரத்தில்.. கம்பீரமாக இருந்தான்.. மாநிறம் என்று சொல்ல கூட முடியாத கருமை நிறம்.. ஏனோ அந்த நிறமே.. அவனது அழகை கூட்டி காட்டுவதை போல அவளுக்கு தோன்றிவைத்தது... அவனது அந்த நிறத்தினாலேயே.. அவன் சிரிக்கும் போது பளிச்சிடும் வெண்ணிற பற்களின் அணி வகுப்பு.. அவள் மனதை மயக்கியது..

அவனிடம் ஒரு காந்த் கவர்ச்சி இருந்தது.. அதை நேத்ரா ஒப்புக் கொண்டாள்...

வந்தாள் மகாலட்சுமி (Completed)Where stories live. Discover now