பொன்மகள் வந்தாள்-15

83 12 1
                                    


இளவேந்தன் கொடுக்கும் சம்பளம் மாணிக்கத்திற்கு தேவைதான்.. அதைவிட தேவை ஒலியருவியின் சந்தோஷம்..

அந்த மழை நாளுக்கு அடுத்த நாள் அவளை அழைத்து வருவதற்காக காலேஜ் போயிருந்தபோது அந்த விபரம் அவனுக்கு தெரிய வந்தது.. பாக்யா தான் அந்த மர்மத்தை விடுவித்தாள்..

"ஏன் மாணிக்கம்.. இதோ இருக்கிற கிரவுண்ட் தான் அவள் மழையில் நனைஞ்சிக்கிட்டு நின்று இருக்கா.. அதைப் பார்க்காமல் கிளம்பி போயிட்டியாக்கும்..?"

மாணிக்கம் பதறி விட்டான்.. 'அப்படி என்றால் ஒலியருவி பாப்பா சொன்ன விவரம்..?'

"சும்மா.. உல்லாங்காட்டிக்கு.."என்றாள் பாக்யா..

"ஆனாம்மா.. அருவி பாப்பாக்கு மழைன்னா பயமாச்சே.."

"பயம் தான்.. ஆனா.. உங்க அப்பா அப்பா ஒரு அடி எடுத்து வைக்க முடியாம லக்ஷ்மணர் கோடு அவங்களுக்கே வழிமறிச்சுருச்சே.."

"இது என்னமா கதையா இருக்கு.."

"கதைதான்.. இந்தக் கதை நான் எங்கேயும் கேட்டதில்ல மாணிக்கம்.."

"நானும் இப்பதான்ம்மா கேட்கிறேன்.."

"இவரை சீனியர் பசங்க ராகிங் பண்ணி.. மழையில் நிற்க வச்சு இருக்காங்க.. இவளும் அசையாம ஆட்டுக்கல் போல இருந்த இடத்திலேயே நின்னிருக்கா.."

"ஏன்மா.. நீங்களே சென்னையில் பிறந்து வளர்ந்தவங்க.."

"இப்போ எதுக்காக அந்த ஆராய்ச்சி மாணிக்கம்..?"

‌ "உங்களுக்கு எப்படிம்மா ஆட்டுக்கால் பற்றித் தெரியும்..?"

"இப்ப அதான் ரொம்ப முக்கியம்... உன்னல்லாம் விப காப்பாத்தி இருக்கக்கூடாது.. இரு.. இப்பவே இவளுடைய அப்பாவுக்கு போன் போட்றேன்.."

"ஐயோ.. அம்மா.. நீங்க அம்மிக்கல் பத்தி பேசினா எனக்கென்ன..? இல்லை.. ஆட்டுக்கல் பத்தி பேசினா தான் எனக்கென்ன‌..? எனக்குத் தேவை என் வேலை மட்டும்தான் மா.. பிள்ளை குட்டிக்காரன் தாயி.. கொஞ்சம் காப்பாத்தி விடுங்கம்மா.. உங்களுக்கு கோடி புண்ணியமாகப் போகும்.."

வந்தாள் மகாலட்சுமி (Completed)Where stories live. Discover now