பொன்மகள் வந்தாள்-11

89 14 1
                                    

     "டேய்..அடங்குமா.."

   மரத்தடி கும்பலில் இருந்த நண்பர்களின் ஒருவனை அடக்கிக் கொண்டிருந்த கணிகண்ணன் அவளைக் கண்டதும் புருவங்களை உயர்த்தினான்..

   "இவ எதுக்காக வந்திருக்கா..?"

   அதற்குள் சதானந்தன் நேத்ரா வருவதைக் கவனித்து விட்டான்..

      
   "மச்சான்.. பட்சி உன்னைத் தேடித்தான் வருது போல.." என்று ஜொள்ளினான்..

    பதிலுக்கு அனல் வீசும் பார்வையொன்றை அவன் மீது வீசினான் கணிகண்ணன்..

    "கொழுப்பாடா..? அந்தப் பொண்ணு அதுபாட்டுக்கு தேமேன்னு வந்துக்கிட்டு இருக்குது.. அது என்னைத் தேடித்தான் வருதுன்னு எதை வெச்சு சொல்ற...?"

    கணிகண்ணனின் பேச்சுக்கு.. நம்பாத சிரிப்பை வெளிப்படுத்தினார்கள்.. அவனது நண்பர்கள்...

      "ஆ..ஆ.. இதை எங்களை நம்பச் சொல்றியா.. டேய்.. உனக்கும்.. அந்தப் பெண்ணுக்கும் இடையில் ரொம்ப நாளா.. ஃபிலீம் ஓடிக்கிட்டு இருக்குன்னு எங்களுக்கும் தெரியும்.."

    "அடிச்சேன்னு வை.. ஒரு அடியில வாய் வெத்தலை பாக்கை போட்டிரும்.. ஏண்டா.. இந்த நேத்ரா பொண்ணுக்கும்.. எனக்கும் இடையில் என்னடா ஓடப் போகுது.."

    "இதைப்பாருடா.. நம்ம மச்சான்.. பெயரையெல்லாம் தெளிவா தெரிஞ்சி வெச்சிருக்கிறதை.. அவளே பர்ஸ்ட் இயர் பொண்ணு.. அவ பெயரை இத்தனை தெளிவாக சொல்லி வைக்கிற.. இதில் உனக்கும்.. அவளுக்குமிடையே.. ஒன்னுமே இல்லையாக்கும்..?"

    "அப்படி என்னத்தைடா கண்டு பிடிச்சு வெச்சிருக்கீங்க..? திரும்பத் திரும்ப.. அவளுக்கு எனக்கும் இடையிலே நண்டு ஓடுது.. நரி ஓடுதுன்னு கதை சொன்னீங்கன்னு வையுங்க.. எனக்கு கொலை வெறி வந்திரும்.."

    "அவளுக்கும் உனக்குமிடையிலே.. ஒன்னும் ஓடலைடா மச்சான்.. அவ பிரண்டு.. அது யாருடா மகேஷ்..?"

    "ஒலியருவி டா மச்சான்.."

     நண்பனின் கேள்விக்கு.. அந்த சம்பத்தாகப்பட்டவன் ரசித்துப்பதில் சொல்லிய விதத்தில்.. உண்மையிலேயே.. கணிகண்ணனுக்குள் கொலைவெறி கிளர்ந்தது..

வந்தாள் மகாலட்சுமி (Completed)Where stories live. Discover now