பொன்மகள் வந்தாள்-17

83 13 2
                                    

கண்ணன் மும்பைக்கு பறந்து விட்டான்.. அருவிக்கு தனிமை சூழ்ந்தது.. அவளை சுற்றியிருந்த மற்ற மாணவ.. மாணவிகளின் கலகலப்பான பேச்சு சப்தம் அவள் செவிகளை எட்டவே இல்லை.. சோர்ந்து போய் விட்டாள்.. இரண்டாம் வருடப் படிப்பை முடித்து.. மூன்றாம் வருடத்தில் அவள் அடியெடுத்து வைத்த போது.. கண்ணன் யு.எஸ்.ஏக்கு பறந்து விட்டான்..

"யு.எஸ்.ஏக்கு போகனும்டி.."

"போயிட்டு வாங்க.."

"இங்கே இருக்கும் போதாவது.. மாசத்துக்கு ஒரு தடவை உன்னை பார்க்க வருவேன்.. இப்போ அதுக்கும் வேட்டு வருது.."

"கொஞ்ச நாள் தானே கண்ணன்.."

"கொஞ்ச நாளா..? வருசம்டி.. நீ படிப்பை முடிக்காம கல்யாணம் பண்ணிக் மாட்டேன்னு அடம் பிடிக்கிற.. அதனால்தான் இந்த அவதி.."

"எப்படி கண்ணன்..? உங்க பேமிலி.. இருக்கிற சிச்சுவேஷனில் நானும் படிப்பை முடிக்காம உங்க வீட்டுக்கு வந்தா நல்லாயிருக்குமா.."

"அதுக்காக உன்னை விட்டு பிரிஞ்சிருக்கனுமா..?"

"ஊஹூம்.. முதல்ல உங்க பேமிலியைக் கவனிங்க.. மாமாவோட கடனை அடைங்க.. வர்ஷிகா +2 வந்திட்டா.. அடுத்த வருடம் அவளை காலேஜில் சேர்க்கனும்.. அதைப் பாருங்க.."

"நீ..."

"உங்களுக்காக காத்திருப்பேன்.."

'அருவி வாக்குக் கொடுத்தாள்.‌. அந்த வாக்கை தம்பி நம்பி கண்ணன் நாடுவிட்டு நாடு பறந்தான்.. அவர்களின் காதல் அலை பேசியில் தொடர்ந்தது.. அவள் மூன்றாம் வருடப் படிப்பை முடித்து.. நான்காம் வருடத்தில் நுழைந்த போது கண்ணனின் தங்கை வர்ஷிகாயும்.. அதே கல்லூரியில் முதல் வருடத்தில் சேர்ந்தாள்..

"உங்க அண்ணன் ஃபைனல் இயர் படிச்சப்போ.. நான் பர்ஸ்ட் இயர் ஸ்டூடண்டா இந்த காலேஜூக்குள்ள நுழைச்சேன்.. அவர் என்னை மழையில் நிக்க வைச்சு ராகிங் பண்ணினார் தெரியுமா..?"

கொட்டும் மழைநாளில் வர்ஷிகாவை வம்புக்கு இழந்தாள் அருவி.. அவள் அருவியின் தோளில் சாய்ந்து கொண்டாள்..

வந்தாள் மகாலட்சுமி (Completed)Where stories live. Discover now