பொன்மகள் வந்தாள்- 3

114 15 12
                                    

விண்ணோடு
மேல சத்தம் என்ன
மண்ணோடு சின்ன
தூறல் என்ன எங்கே
தான் சென்றாயோ
இப்போது வந்தாயோ
சொல்லாமல் வந்தது
போல் நில்லாமல்
போவாயோ தப்பாமல்
மீண்டும் சந்திப்பாயோ

நீ வரும்
போது நான் மறைவேனா
நீ வரும் போது நான்
மறைவேனா தரிகிட
தரிகிட தா

விண்ணோடு
மேல சத்தம் என்ன
மண்ணோடு சின்ன
தூறல் என்ன

"பாடிக்கொண்டே.. மழை நீரை.. காலால் அளைந்தபடி வந்து கொண்டிருந்த கணிகண்ணன்...

"யாரு இவ.. பார்த்தா பச்சக்குன்னு மனசில ஒட்டிக்கிறதைப் போல பளிச்சென்று இருக்காளே..."

அவனது புருவங்கள் மேலேறினார்...

ஒலியருவி அதற்கு முன்னால்.. அந்த கல்லூரி வளாகத்துக்குள் அவன் பார்த்திருக்கவில்லை..

கல்லூரி மைதானத்தை கடக்கும் போது அவள் மீது தெறித்து விழுந்த மழைத்துளிகளால் அவள் நனைந்திருந்தாள்.. அவள் முகத்தில் ஆங்காங்கே நீர் முத்துக்களாக படிந்திருந்த மழைத்திவலைகள் அவனுக்கு பனியில் நனைந்த மலரை நினைவு படுத்தியது..

அவளுடன் பேச வேண்டுமென்ற ஆவல் அவன் மனதில் தோன்றியது..

"ஏய்.. இங்கே வா.." அவன் சொடக்கு போட்டு அவளை அழைத்தான்..

ஒலியருவியின் முகத்தில் வியப்பின் சாயல் படிந்தது.. அதுவரை.. அவளை யாரும் அப்படி அழைத்ததில்லை.. அவளது விழியசைவில்.. "அம்மா.." என்று ஓடி வந்து கைகட்டி நிற்பார்கள்..

அப்படிப்பட்டவளை சொடக்கு போட்டு அவன் அழைத்தவிதம் அவளுக்குப் பிடித்திருந்தது.. என்ன வென்று சொல்ல தெரியாத இதமான ஓர் உணர்வு அவள் திகைப்புடன் உணர்ந்தாள்..

அவளைப் போல சிறிதளவே நனையாமல்.. அவன் சொட்டச் சொட்ட நனைந்திருந்தான்.. ஈரத்தினால் கலைந்து இருந்த அவனது முரட்டு முடிக்கற்றை அவனது முன் நெற்றியில் படிந்திருந்தில் ஓர் கவர்ச்சியை அவள் உணர்ந்தாள்.. கால்களை அகற்றி அதை ஊன்றி அவன் நின்றிருந்த விதத்தில் ஒர் கம்பீரம் வெளிப்பட்டு அவர் கருத்தைக் கவர்ந்தது...

வந்தாள் மகாலட்சுமி (Completed)Where stories live. Discover now