பொன்மகள் வந்தாள்-7

99 12 0
                                    

"அவனா..?" வழி விரித்தாள் நேத்ரா...

"என்ன டி..?" ஒலியருவிக்கு அவளது கேள்வி பிடிபடவில்லை..

"அவன் ரெளடி.. காலேஜே அவன் கண்ட்ரோலில் தான் இருக்குது.. யாராவது வாலாட்டினா.. ஓரே அறை தான் அத்தனை பல்லும் உதிர்ந்திடும்.."

"அடேங்கப்பா.. அப்படி யாரை அடிப்பான்..?"

"ரோக்குகளைத்தான் அப்படி யாரை அடிப்பான்.. இந்த கேர்ள்ஸ் கிண்டலடிக்கிறது.. அவங்களை டார்ச்சர் பண்ண நினைக்கிறது இதெல்லாம் அவனுக்கு கட்டோடு பிடிக்காது.."

"அப்புறம் எப்படி அவனை ரெளடின்னு சொல்ற..?"

"அடிதடின்னாலே ரெளடிதானேடி.."

"தப்பு பண்ணினா அடிக்கனும்.. அதுதானே ஆண்மை.. ரெளத்திரம் பழகுன்னு பாரதியாரே சொல்லியிருக்கார்.. அவன் ரெளடியில்லை.. ரெளத்திரன்.."

விட்டால் அவனுக்கு கோவிலே கட்டி கும்பாபிஷேகம் பண்ணி விடுபவளைப் போல முகத்தை தீவிரமாக வைத்துக்கொண்டு ஒலியருவி பேசிய விதத்தில் நேத்ரா அதிசயம் பட்டுப் போனாள்..

"நேத்து ஒரு நாள் தானே டி அவன் கூட பழகியிருக்க..?"

"ஊம்.. அதுக்கு என்ன..?"

"அதுக்குள்ள அவனை ஹீரோ ரேஞ்சுக்கு ஏத்தி பேசி பில்ட்-அப் கொடுக்கிறேயே.. இருந்தாலும் ரொம்பவும் ஓவர்டி.."

"எனக்கு ஒன்னும் அப்படி தோலை.."

"தோனாது.. தோனாது.."

உதட்டை சுழித்து.. அழகு காட்டிய நேத்ரா.. ஒலியருவியின் முதுகிற்கு பின்னால் பார்வையை படற விட்டாள்.. உடனே முகம் மாறினாள்..

"எதுக்கு இப்படி அரண்டு போய் பார்க்கிறா..?"

ஒலியருவிக்கு புரியவில்லை...

"என் டி பிசாசு.. இந்த முழி முழிக்கறே.." என்று இந்திரஜா மகளாக அதட்டினாள்..

"அவன் வராண்டி.. நேரா இங்கே தான் வர்றான்.." நேத்ராவின் குரல் நடுங்கியது..

"என்னவோ.. வாரான்.. வாரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே.." என்று பயமுறுத்துவதை போலவே பேசிக் கொண்டிருந்தவளிடம் விவரம் கேட்டு ஓய்ந்து போன ஒலியருவி.. இது வேலைக்கு ஆகாது என்று திரும்பி பார்த்தாள்..

வந்தாள் மகாலட்சுமி (Completed)Where stories live. Discover now