பொன்மகள் வந்தாள் -9

86 14 1
                                    

மறுநாள் மரத்தடி மேடையில் அமர்ந்து அவனுக்காக காத்திருந்த போது.. நொடிகள் நகர்வதை யுகங்கள் நகர்வை போல உணர்ந்தாள் ஒலியருவி..

அவள் முன்னால் நீண்ட நிழல் விழுந்தது.. ஆவலாக நிமிர்ந்து பார்த்தாள்.. அவளை உறுத்து பார்த்தபடி சிவந்த விழிகளுடன் அவன் நின்றிருந்தான்..

ஒலியருவி அவனது கோபத்தை உணர்ந்தவளா உதடுகளை கடித்தபடி தலை குனிந்தாள்.. குற்றம் சாட்டும் பார்வையுடன் அவளருகே அமர்ந்தான் அவன்..

"ஏண்டி..?"

மீண்டும் அதே உரிமையான அழைப்பு...

அவள் மனம் சிறகடித்துப் பறக்க ஆரம்பித்தது.. அவனது அந்த பேச்சில் ஆனந்தமாக மூழ்கி திளைத்து எழுந்தது அவள் மனம்..

"கேட்கிறேனில்ல.." அவன் அதட்டினான்..

அவனது கேள்வி அவளுக்கு புரிந்தது.. அவளது விலகலுக்கான காரணத்தை கேட்கிறான்..

"அது.. அது.." சொல்ல முடியாமல் அவள் திக்கித் திணறினாள்..

"என்னன்னு எனக்கு தெரிஞ்சாகனும்.. உனக்கு பிடிச்சித்தானே என் கூட பேசி பழகின.. அப்புறமும் எதுக்காக விலக பார்த்த..? உன் கோடிஸ்வர புத்தி முழிச்சிருச்சா..? என்னடா.. நம்ம ரேஞ்ச்க்கு இவன் கிட்டக்கூட வரமுடியுமான்னு நினைப்பு வந்துருச்சா..?"

அவன் குத்தலாக கேட்டான்.. கேள்விகளை கேட்பதற்கு கொஞ்சம் கூட அவன் தயங்கவில்லை..

வில்லில் இருந்து விடுபட்டு வரும் அம்புகளை போல அவனது கேள்வி கணைகள் குறிபார்த்து அவள் வேதனையுடன் அவனை பார்த்தாள்...

"இப்படி பாத்தா என்ன அர்த்தம்..? என் கேள்விக்கு பதிலை சொல்லு.."

"உங்களை எதுக்காக கேர்ள்ஸ் சுற்றிச்சுற்றி வரனும்..?"

அவள் சொல்லிவிட்டாள்.. அதை கேட்டவனின் முகம் முதலில் வியப்புக்கு மாறியது.. பின்னர் வழக்கமான தனது கடகட சிரிப்பை சிரித்தான் அவன்..

அந்த மாயக் கண்ணனின் சிரிப்பை போலவே அவன் சிரிப்பும்.. மனதை கொள்ளை கொள்வதை உணர்ந்து தவித்துப் போனாள் ஒலியருவி.‌.

வந்தாள் மகாலட்சுமி (Completed)Where stories live. Discover now