பொன்மகள் வந்தாள் -13

88 14 3
                                    

  "அருவி..."

   சோர்வாக மாடிப்படியில் கொண்டிருந்தவளை அழைத்தார் இளவேந்தன்..

  ‌  அவரது அழைப்பில்.. அவர் பக்கத்தில் அமர்ந்திருந்தவன் ஆவலுடன் திரும்பி அவளைப் பார்த்தான்..

     "எஸ் டாட்.."

     அருவி ஹாலுக்கு வந்து நின்றாள்..

     அவளின் அகன்ற கருவிழிகளையும்.. அழகான முகத்தையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவனின் செய்கையில் முகம் சுருங்கினாள்..

   "இவர் சஞ்சீவ்.. யூதிகா குரூப் ஆப் கம்பெனியின் எம்.டி."

    இளவேந்தன் அறிமுகத்திலேயே அவனது உயரம் தெரிந்தது.. அவனும் அதை உணர்த்துகிறவனைப் போல.. கால் மேல் கால் போட்டுக் கொண்டு.. தோரணையாக அமர்ந்திருந்தான்

  "ஹலோ.." அவன் முகம் பார்க்காமல் சொன்னாள் அருவி...

   "ஹாய்.." அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்..

    அவனது பார்வை அவள் மீதே படிந்திருப்பதை உணர்ந்து கொண்டவளால் அங்கே நிற்க முடியவில்லை..

    "பை டாடி.. நான் காலேஜுக்கு கிளம்பறேன்.." நகர முற்பட்டாள்..

    "இன்றைக்கு ஒரு நாள் காலேஜுக்கு லேட்டா போயிக்கலாம்.. அதனால் ஒன்றும் கெட்டு விடாது... இப்படி உட்கார்.." இளவேந்தன் குரலில் கண்டிப்பு இருந்தது.

    வேறு வழியின்றி.. அவர்களுக்கு எதிரேயிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டதில் அவளுக்கு சங்கடம் அதிகரித்தது..

    அவளது படிப்பு.. ரசனை.. தோழர் தோழிகள் என்று கேட்பதற்கு அவனிடம் நிறைய கேள்விகள் இருந்தன..

    பதிலுக்கு கேட்க.. அருவிடம் ஒரு கேள்வி கூட இல்லை..

    இந்திரஜா.. அமைதி தவழும் முகத்துடன் அவனுக்கு காபி.. டிபன் கொடுத்து.. ஒலியருவியை அசத்தினாள்..

   "அம்மாவா.. இது..?"

   எப்போதும் இந்திரஜா இது போன்ற கருணை வடிவத்துடன் இருந்தால் எப்படியிருக்கும்.. என்ற ஏக்க அலை அவள் நெஞ்சில் தோன்றி மறைந்தது..

வந்தாள் மகாலட்சுமி (Completed)Tempat cerita menjadi hidup. Temukan sekarang