பொன்மகள் வந்தாள் -10

91 14 1
                                    

கண்ணன் முகத்தோற்றம் கண்டேன்
கண்டவுடன் மாற்றம் கொண்டேன்
கண்மயங்கி ஏங்கி நின்றேன்
கன்னி சிலையாகி நின்றேன்

என்ன நினைந்தேனோ...தன்னை மறந்தேனோ!
கண்ணீர் பெருகியதே...ஓ...கண்ணீர் பெருகியதே!!

கண்ணன் என்னைக் கண்டுகொண்டான்
கை இரண்டில் அள்ளிக் கொண்டான்
பொன்னழகு மேனி என்றான்
பூச்சரங்கள் சூடித் தந்தான்

    கணிகண்ணன் முதுகின் மேல் முதுகை சாய்த்து அமர்ந்து... எதிர்புறமாக திரும்பி பாடிக் கொண்டிருந்தாள் ஒலியருவி..

    அந்தி நேரத்து சூரியனின் சிவந்த கதிர்கள்.. அலையடிக்கும் நீலக்கடலின் மேல் புறத்தில் படிந்து.. பிரதிபலித்தன...


     மாலை நேரத்தின் கடற்கரைக்கான கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது.. "தேங்காய்.. மாங்காய்.. பட்டாணி.. சுண்டல்.." விற்கும் சிறுவர்கள் இங்கு மங்குமாக அலைந்து கொண்டிருந்தார்கள்.. யாரும்.. யாரையும் கவனிக்காமல் பிரிந்து அமர்ந்து தங்களுக்குள் ஓர் உலகை சிருஷ்டித்துக் கொண்டு.. சிரித்துப் பேசியபடி இருந்தார்கள்..

     ஒலியருவி முதுகின் மேல் தன் முதுகை சாய்த்து எதிர் திசையில் திரும்பி அமர்ந்திருந்த அவனது அசைவுக்கு ஏற்ப ஒலியருவி.. அசைந்து கொண்டிருந்தாள்..

     "ஸ்வீட் வாய்ஸ்ஸ் டி உனக்கு.."

     "தேங்க்ஸ்.."

    ‌ "இதுக்கு ஒரு தேங்க்ஸா..? அடிச்சு பல்லைக் கழட்டிடுவேன்.."

    
     "ஹப்பா.. ரெளடியைக் காதலிச்சா இந்தக்கதிதான்.."

      "நான் ரெடியா..?"

      "பின்னே.. இல்லையா..?"

      "ஆமாண்டி.. நான் ரெளடிதான்.. இந்த ரெளடி இப்ப உன்னை ஸ்வாஹா பண்ணப் போறான்.."

வந்தாள் மகாலட்சுமி (Completed)Where stories live. Discover now