பொன்மகள் வந்தாள் -18

94 13 1
                                    

வீட்டுக்கு போகாமல் சஞ்சீவ் கிழக்கு கடற்கரைச் சாலையில் காரை திருப்பவும் அருவி முகம் சுளித்தாள்..

"வாட் இஸ் திஸ்..?"

"உன்னோடு பேசனும்.."

"எதை பத்தி..?"

"என் காதலை பத்தி.."

"அதுக்கான பதிலை அன்றைக்கே சொல்லி விட்டேனே.. நான் வேற ஒருத்தரை காதலிக்கிறேன்.."

"ஐ டோண்ட் கேர்.. நீ ஒன்னும் அவனை மேரேஜ் பண்ணிக்கலைல்ல.. உன் மேரேஜ் என்னோடு தான்.."

"கனவு காண வேண்டாம் சஞ்சீவ்.. என் வாழ்க்கை என் கண்ணனோடு தான்.."

"கண்ணன்..? ஹூ இஸ் தட் கண்ணன்..?" சஞ்சீவ் புருவங்கள் உயர்ந்தன..

"ஹி இஸ் மை சோல் பார்ட்னர் அன்டு மை லைஃப்.."

"ஓ.. அவன் தான் நீ சொன்ன லவ்வரா..?"

"யெஸ்.."

"லுக் அட் மீ அருவி.. தமக்குள்ளே ஸ்டேட்டஸ் ஈக்குவலா இருக்கு.. எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.."

"எனக்கு உங்களை பிடிக்கலையே.."

"பட்.. உன் அப்பாவுக்கு என்னைப் பிடிச்சிருக்கே.."

"அப்படின்னா.. நீங்க ஏன்.. டாடியை மேரேஜ் பண்ணிக்கக் கூடாது..?"

சஞ்சீவ் பல்லைக் கடித்தான்.. எவ்வளவோ சொல்லி பார்த்தும் மகாபலிபுரத்தில் இறங்க அருவி மறுத்துவிட்டாள்..

"இங்கே வரும்ன்னு நான் சொல்லலை மிஸ்டர் சஞ்சீவ்.. நீங்களா தான் வந்தீங்க.. உங்களுக்கு இங்கே சுற்றி பார்க்கணும்னு தோணினா.. தாராளமாய் போய் சுற்றிப் பார்த்துட்டு வாங்க.. நான் காரிலேயே வெயிட் பண்றேன்.."

எதிலும் தோற்காத சஞ்சீவ் அன்று தோல்வியை கண்டதில் அதிகமான கோபம் கொண்டான்.. அது இளவேந்தன் மீது பாய்ந்தது.. அப்போதும் அவர் மகளைக் கூப்பிட்டு ஏன் அன்று கேட்கவில்லை..

"விட்டு பிடிப்போம் இந்திரா.."

"விட்டால் பிடிக்க முடியாதுன்னு தோணுதுங்க.."

"விடுகிறதே.. பிடிப்பதற்காகத் தான்.. புரிஞ்சிக்க.."

இளவேந்தன் நிதானம்.. அருவிக்கு ஆச்சர்யத்தை தான் கொடுத்தது.. புலி பதுங்குவது பாய்வதற்காக தான் அவளது அறிவு அவளை எச்சரித்தது.. அவரது போர் தந்திரத்தை அவளறிவாள்.. ஆனால் இப்போது என்ன வியூகம் வகுத்துக் கொண்டிருக்கிறார் என்று தெரியாமல் தான் அவள் குழம்பித் தவித்தாள்.

வந்தாள் மகாலட்சுமி (Completed)Where stories live. Discover now