பொன்மகள் வந்தாள் -6

109 14 3
                                    

இளவேந்தன் வீட்டில் முன்னாலிருந்த பிரம்மாண்டமான கோட்டையும்
அதன் முகப்பிலிருந்த ஆடம்பரமான செக்யூரிட்டியின் அறையையும் பார்த்தவனுக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை..

'இந்த வீட்டில் இருக்கிறவர்களை.. இவளுக்கு எப்படி தெரியும்..?' சந்தேகம் நெஞ்சில் எழுந்தது..

அதை அவளிடமே கேட்டு விடலாம் என்று திரும்பி பார்த்தால்.. அவளைக் கண்ட செக்யூரிட்டி அலறியடித்துக் கொண்டு.. "சின்னம்மா.. நீங்களா..?" என்று ஓடி வந்தான்..

"சின்னம்மாவா..? இவளா..?"

அவன் திகைப்பில் ஆழ்ந்த போது... அந்த பிரம்மாண்டமான கேட் திறந்து அவர்களுக்காக வழிவிட்டது...

"வாங்க.." அவனை வரவேற்றபடி.. உரிமையுடன் உள்ளே நடந்தாள் ஒலியருவி..

அந்த வீட்டின் சுற்றுப் புற வளாகத்தையும்.. தோட்டத்தையும்.. நீச்சல் குளத்தையும் பார்த்தவனுக்கு.. 5 நட்சத்திர ஹோட்டலுக்கு வழி தப்பி வந்து விட்ட உணர்வு ஏற்பட்டது..

போர்டிகோவில் அணிவகுத்து நின்ற கார்களின் வரிசையைக் கண்டவனுக்கு.. எதனால் அவளுக்கு இரண்டு சக்கர வாகனத்தில் ஏற வேண்டிய அவசியமில்லாமல் போனது என்று புரிந்தது..

'இவளுக்கு டூ வீலரில் ஏறி பழக்கமிருந்திருக்காது.. அதை நான் வேற மாதிரி நினைச்சிட்டேன்.. இவளுக்கு வேற அட்வைஸ் பண்ணி தொலைச்சிட்டேன்.. இவ என்னை என்னன்னு நினைச்சிருப்பா..'

அவளை பார்த்தவனின் எண்ணவோட்டத்தை புரிந்து கொண்டதை போல் மென்மையாக சிரித்தாள்..

"இது உன் வீடா..?"

"ம்ம்ம்.."

"அப்புறம் எதுக்கு அப்படியிருந்த...?"

"எப்படி..?"

"நான் அட்வைஸ் பண்றப்போ - கோவில் மாட்டைப் போல தலையை தலைய ஆட்டிக் கேட்டுக்கிட்டியே.. ஏன்..?"

"வேற என்ன செய்ய சொல்றீங்க..?"

"உண்மையை சொல்லாமில்ல..?"

அவனது கேள்வியில் இருந்த நியாயம் அவளுக்கு புரியத் தான் செய்தது..

வந்தாள் மகாலட்சுமி (Completed)Unde poveștirile trăiesc. Descoperă acum