பொன்மகள் வந்தாள்-12

87 12 4
                                    

கணவன்.. மனைவிக்கிடையே உள்ள உறவு மட்டும் அந்தரங்கமானது அல்ல.. காதலர்களுக்கிடையே இருக்கும் உறவும் அந்தரங்கமானது தான்.. அதை மற்றவர்கள் அறிய பகிரங்கப் படுத்த முடியாது.. பகிரங்கப்படுத்தவும் கூடாது..

    கணிகண்ணனுக்கும்.. ஒலியருவி இடையே நிலவி வந்த ஆழ்ந்த காதலை அறிந்தவள் நேத்ரா.. ஒலியருவியின் காதலில் ஓர் சாத்வீகம் இருப்பதை அவள் அறிவாள்.. அப்படிப்பட்ட காதலைப் பெற்ற கணிகண்ணன்.. அதற்கான பிரதிபலிப்பை பிரதிபலிக்காமல் இருப்பதைப் போல அவளுக்குத் தோன்றியது.. அதை அவளது குற்றம் சாட்டும் வார்த்தைகளும் உணர்த்திவிட்டன..

    கணிகண்ணனின்.. கல் போன்ற கடினமான முகபாவத்தின் பிண்ணனியில் உறைந்திருக்கும் உண்மை என்னவென்று நேத்ரா  கண்டு பிடிக்க முடியவில்லை.

     "நான் நியாயவாதி தான்.. அதில் உனக்குச் சந்தேகம் வேணாம்.. உன் பிரண்டுக்குத்தான் அதில் சந்தேகம்.."

     "குட் ஜோக்.. உங்களுக்கு அவளைப் பற்றி என்ன தெரியும்..?" நேத்ரா படபடத்தாள்..

    
      இதைக் கேட்டவனின் முகத்தில் லேசான மாறுதல் ஏற்பட்டது...

      "அப்புறமும் எதுக்கு என்னைத் தேடி வந்த..?"

      அப்போது தான் தன் கேள்வியை உணர்ந்தாள் நேத்ரா..

      அவனுடைய காதலியைப் பற்றி.. காதலனான அவனுக்குத் தெரியாதா.. தோழியான அவளுக்குத் தெரிந்திருக்கப் போகிறது..? அவள் நாக்கைக் கடித்துக் கொண்டாள்...

        "ஸாரி.. நான் அந்த அர்த்தத்தில் சொல்லலை.."

        "இட்ஸ் ஆல்ரைட்.. என்னன்னு சொல்லு.."

         "உங்களைப் பற்றித் தவறான ஒரு சொல்லை.. அவள் முன்னால் யாரும் சொல்லிர முடியாது.. பிடிபிடின்னு பிடித்து விடுவாள்.."

        "நானும் அப்படித்தான், என்ன ஒன்னு.. நான் கொலையே பண்ணிடுவேன்.."

        அலட்டிக் கொள்ளாமல் பேசியவனைப் பார்த்த போது.. அவனை ரெளத்திரன்.. என்று கண்களில் காதல் மின்ன.‌‌. ஒலியருவி சொன்னதற்கான அர்த்தம் பரிபூரணமாக அவளுக்கு விளங்கியது..

வந்தாள் மகாலட்சுமி (Completed)Where stories live. Discover now