இறுதி கவிதை

86 8 2
                                    

என் விட்டு மஹாலக்ஷ்மி

என் வீட்டு மஹாலக்ஷ்மிதாலி கட்டிய தாரம் அவள்என் வீட்டிற்கு வந்த தேவதை அவள்விழி வழியே பேசுபவள் அவள்என் விருப்படி நடப்பவள் அவள்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

என் வீட்டு மஹாலக்ஷ்மி
தாலி கட்டிய தாரம் அவள்
என் வீட்டிற்கு வந்த தேவதை அவள்
விழி வழியே பேசுபவள் அவள்
என் விருப்படி நடப்பவள் அவள் ...........

எனக்கென துணை அவள்
இறுதிவரை இணை அவள்
எனக்காக வாழ்ந்து மடியும்
விசுவாச பிறவி அவள் ........

அரவணைப்பில் தாரம் அவள்
அன்பில் தாய் அவள்
இல்லற சுமை ஏற்கவந்த
இணையான தோழி அவள் .........

குணத்தில் குணவதி அவள்
பண்பில் பகுத்தறிவு படைத்தவள் அவள்
கண்ணுக்கு தெரியா கடவுளை விட்டுவிட்டு
கணவனையே கடவுளாய் நினைப்பவள் .......

அன்பை போதிக்கும் ஆசான் அவள்
ஒழுக்கத்தில் கண்ணகி அவள்
உயிர்பிக்கும் பிரம்மா அவள்
என்னுள் உணர்வாகிய உயிர் அவள் ...........

சிக்கன சேமிப்பாளி அவள்
குடும்பத்தின் கணக்காளி அவள்
வரவை அதிகரித்து செலவை குறைப்பவள் அவள்
என் வீட்டுக்குவந்த மகாலட்சுமி அவள் ..........

மகளுக்கு மகளுமாய் ஆனவள்
மருமகளாய் குடும்பம் காப்பவள்
உறவை நேசிப்பவள் அவள்
ஒற்றுமை பேணுபவள் அவள் .........

எனக்காக வாழ்பவள் அவள்
அவளுக்காக வாழ்பவன் நான்
இறுதிவரை இணைபிரியாமல்
இல்லறம் கடப்போம் நல்லற துணையோடு ...........

வந்தாள் மகாலட்சுமி (Completed)Where stories live. Discover now