நெஞ்சோரம் உன் கண்ணீர் துளி

669 7 0
                                    

                 அத்தியாயம் 1



டேய் கண்ணா மூன்று மணி நேரம் தொடர்ந்து ஒர்க் அவுட் செய்துவிட்டு இருக்க .  உன் உடம்புக்கு எதாவது ஆயிடும்டா . அம்மா சொல்றதை கேளுடா கண்ணா .

இந்த  குடி , கேர்ள் ஃபிரண்ட்ஸ் கூட ஊர் சுத்தறது எல்லாம் நிப்பாட்டி விட்டு ,  நான் உனக்கு பார்த்து வைத்திருக்க பெண்ணை கல்யாணம் செய்து சந்தோஷமா இருடா .

நீ இப்படியே இருந்தா உன் அப்பாவோட கம்பெனி , நம்ம குடும்பம் மானம் எல்லாம் காத்து வழியா பறந்து போய் உலகமே உன்னை பார்த்து சிரிக்கும்டா .

அமெரிக்காவின் நம்பர் ஒன் கெமிக்கல் கம்பெனி ஓனரோட ஒரே மகன் தொழிலை பார்க்காமல் பொறுப்பில்லாமல் நடக்கிறான் என்று பத்திரிகை , டிவில வரும்டா .

இப்பவே இங்கே இருக்கிற பாதி பேருக்கு தெரிந்து போச்சு . இனிமேலும் நீ இப்படியே இருந்தா என் இதயமே நின்று விடும்டா . உனக்காக இல்லாமல் இருந்தாலும் உன் அம்மாவுக்காக சரின்னு சொல்லு கண்ணா .

சாந்தினி நீ இப்படி கண்ணா , செல்லம்னு கொஞ்சீட்டே இருந்தா உன் மகன் இன்னும்  தறுதலையா தான் போவான் .  முதல்ல உன் தண்டச் செலவு மகனை கொஞ்சுவதை நிப்பாட்டு .

நம்ம பார்த்து வைத்திருக்கிற பொண்ணை அடுத்த மாதமே இவன் கல்யாணம் செய்யணும் . இல்லைன்னா இந்த உலகத்துக்கு முன்னாடி நான் இவனை நம்ம கம்பெனி ,  வீட்ல இருந்து துரத்தி விட்டதா பேட்டி கொடுக்க வேண்டி வரும் .

அப்போ தெரியும் இவனுக்கு உலகம்னா   என்ன என்று ,  இந்த வீட்டை விட்டு வெளியே துரத்தினால் ஒரு டாலருக்கு கூட இவன் சிங்கி அடிக்கணும் .

அப்பத்தான் இந்த அப்பனோட வேல்யூ என்ன என்று தெரியும் . நிறுத்துங்க ...மிஸ்டர் சபரிநாத் , நீங்க வெளியே துரத்தினால் நான் ஒரு டாலருக்கு கூட சிங்கி அடிப்பேனா ?

குட் ஜோக் …

என் திறமைக்கு மாதம் ஒரு லட்சம் டாலர் சம்பாதித்து காட்டுறேன் . சொல்லீட்டு இருக்கியே தவிர வீட்டை விட்டு வெளியே போக மாட்டேன் என்கிறாயே ,

நெஞ்சோரம் உன் கண்ணீர் துளிWhere stories live. Discover now