அத்தியாயம் 14

180 7 0
                                    

ஐந்து மாதங்கள் கழிந்து

ஆத்விக் அன்று மதியம் மாலில் இருக்கும் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டு இருக்க , அந்த நேரம் உள்ளே வந்த ஒரு இந்திய ஜோடியை பார்த்த  மைக்கேலின்  கண்கள் மின்ன ஆத்விக் அங்க பாரு .

அந்த பொண்ணு பிரக்னண்டா இருக்கா . அவ புருஷன் காரன் அவளை எப்படி அணைத்து கூட்டிட்டு வாரான் பாரு . நான் நினைக்கிறேன் அவங்க உன் நாட்டுக்காரங்கன்னு . எஸ் அவங்க தமிழ் தான் பேசுறாங்க .

பார்க்க ரொம்ப க்யூட்டா இருக்கு இல்ல . மனைவியை ஒரு நிமிஷம் கூட விலகாமல் அணைச்சுட்டு இருக்கான் பாரு . அது மட்டுமா அவ என்ன கேட்டாலும் வாங்கி கொடுக்கிறான் .

ஆனால் அவர்கள் பேசுவது தான் எனக்கு புரியல . ஏய் உனக்கு புரிந்தா எக்ஸ்பிளைன் செய்து  சொல்லு . அந்த பொண்ணு ஐஸ்கிரீம் கேட்டா வாங்கி கொடுத்தான் . இன்னொன்றும் கேட்டா அவன் முடியாது என்று சொன்னான் .

அவ உன் குழந்தை இன்னோர் ஐஸ்கிரீம் வேணும்னு கேக்குதுன்னு சொன்னா . உடனே அவனும் வாங்கி கொடுத்துட்டான் . "  ஓ " அப்போ ஆத்விக் குழந்தைக்காக என்ன கேட்டாலும் வாங்கி கொடுப்பாங்களா ?

பார்த்தா அப்படித்தான் தெரியுது . ஆத்விக் நீ கொஞ்சம் உன்னிப்பாக அவனை  பாரு . உனக்கு ஏதாவது யூஸ் ஆகலாம் . ஆத்விக் உன் வைஃப் வேற பிரக்னண்டா இருக்காங்க .

நீ இந்த நேரம் அவங்க மனசை டச்  செய்ற மாதிரி ஏதாவது செய்து அவங்க கூட சேர பாரு . அப்படியே உன் ஃபேமிலி கூடவும் ,

அப்படியா  சொல்ற ! யா... யா ... ஆத்விக் சுவாரஸ்யமாக அவர்கள் இருவரையும் பார்க்க தொடங்க , இருவரும் கண்களால் பேசுவதும் அவன் பார்த்தவுடன் அவளின் கன்னம் சிவப்பதையும் பார்த்தவன் ,

" ஓ " நான் பார்த்தவுடன் ஆராவும் இப்படித்தான் வெட்கப்பட்டு கன்னம் சிவந்து  தலை   குனிவா . அப்போ எல்லா பொண்ணுங்களும் இப்படித்தான் இருப்பாங்களா . கிளாரா , ரோஷினி இப்படி இல்லையே .

அவங்க இரண்டு பேரையும் பொண்ணுங்க லிஸ்டில் சேர்க்க முடியாது . மைக்கேல் சுவாரஸ்யமாக பார்ப்பதை பார்த்தவன் ,  மைக்கேல் எதற்கு இப்படி வித்தியாசம் பார்க்கிற .

நெஞ்சோரம் உன் கண்ணீர் துளிWhere stories live. Discover now