அத்தியாயம் 15

230 6 0
                                    

நாட்கள் மாதங்கள் ஆகி ஆராவிற்கு பிரசவ வலி எடுக்க , அவளை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்ய , 6 மணி நேரம் கடந்தும் அவளுக்கு குழந்தை பிறக்காமல் அவள் வலியில் துடிப்பதை பார்த்த சாந்தினி ,

தன் மகனை கூப்பிட , தன் தாய் போன் செய்தவுடன் அதை எடுத்தவன் மாம்  என் மேல இருந்த கோபம் போயிடுச்சா . அதை விடுடா ஆராவுக்கு பிரசவ வலி வந்து அட்மிட் செய்து இருக்கோம் .

ஆனா அவளுக்கு சுகப்பிரசவம் நடக்காது போல இருக்கு . நீ உடனே வாடா எனக்கு பயமா இருக்கு .  டாக்டர் ஒரு உயிரைத் தான் காப்பாற்ற முடியும் என்று சொல்றாங்க .

என்ன மாம் சொல்றீங்க ? ஆமாடா நீ வந்து பார்ம்ல சைன் போடு .  மாம் கடைசி நேரம் வரை என்ன செய்து கொண்டு இருந்தீங்க . என்னை கூப்பிடலாம் இல்லையா .  உனக்கு தான் அவளை பிடிக்கலையே .

இப்ப அவ உயிருக்கு போராடிட்டு இருக்கா . இதுக்கா அவளை உனக்கு கட்டி வைத்தேன் . என் மருமகளுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு உன்னை என்னால மன்னிக்கவே முடியாதுடா . மாம்  நான் வந்துட்டே இருக்கேன் முடிந்த அளவு அவளை காப்பாற்ற பாருங்க .

குழந்தை கூட எனக்கு முக்கியம் இல்ல . மாம் அவளை காப்பாற்ற டாக்டர் கிட்ட சொல்லுங்க .  டாக்டர் எல்லாரும் உள்ளே தான் இருக்காங்க . அவ கதறுவதை என்னால் தாங்க முடியலடா .

என் மருமகள் இல்லாத ஒரு உலகத்தை என்னால நினைத்துக் கூட பார்க்க முடியல . மாம் நம்பிக்கையோடு இருங்க அவளுக்கு ஒன்றும் ஆகாது . எல்லாம் உன்னால் தான் .

நீ மட்டும் அவ கூட சந்தோசமா இருந்திருந்தால் அவளுக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்குமா . மாம் வந்துட்டியாடா டாக்டர்ஸ் எங்க ? லேபர் ரூம்ல இருக்காங்க .  நம்ம ஃபேமிலி டாக்டர்ரும் ,  சீப்  டாக்டரும் உள்ளே தான் இருக்காங்க .

மேடம் இந்த பார்ம்ல சைன் போட்டு தர சொல்லுங்க . அப்பதான் ஆபரேஷன் பண்ண முடியும் .  சீக்கிரம் சைன் போடுடா . அவளை மட்டுமாவது டாக்டர் கிட்ட காப்பாற்ற சொல்லுங்க .

நெஞ்சோரம் உன் கண்ணீர் துளிWhere stories live. Discover now